‘எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்..’ பிரபல நடிகருடனான காதலை உறுதி செய்த தமன்னா?

Tamanna: பிரபல நடிகை தம்மனா, நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்த உண்மையை அவரே கூறியுள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 13, 2023, 03:59 PM IST
  • தமன்னா, விஜய் வர்மா என்பவரை காதலிப்பதாக தகவல்.
  • இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
  • இதனால், தமன்னா விஜய் வர்மாவை காதலிப்பதை ரசிகர்கள் உறுதிப்படுத்துயுள்ளனர்.
‘எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்..’ பிரபல நடிகருடனான காதலை உறுதி செய்த தமன்னா? title=

ஜெயிலர் பட நாயகி தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தவல்கள் பரவியது. இந்த நிலையில், இவர்கள் ஒன்றாக சுற்றும் வீடியோக்களும் போட்டாேக்களும் இணையத்தில் வட்டமடிக்க ஆரம்பித்தன. இதுகுறித்து, தமன்னா தான் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். 

தமன்னாவின் காதல் வாழ்க்கை..

நடிகை தமன்னாவிற்கு கடந்த சில வருடங்களாக பாலிவுட் பட வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்து வந்த தமன்னா, தற்போது இந்தி ரசிகர்களுக்கும் பரீச்சியமான முகமாக மாறிவிட்டார். பல நாட்களாக சிங்கிள் என்ற ஸ்டேடஸை அப்டேட் செய்யாமல் இருந்த இவர், தற்போது ஒரு நடிகரின் காதல் வலையில் விழுந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தவிர, தனது தனிப்பட்ட வாழ்க்கையை கேமரா முன் காண்பிக்காத பிரபலங்களில் ஒருவர் தமன்னா. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக பேசப்பட்டது. பிறகு, அந்த தகவல் காற்றோடு காற்றாக கரைந்து போனது. தற்போது, இந்தி நடிகரான விஜய் வர்மாவும் இவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இருவருமே வாய் திறக்காமல் உள்ளனர். 

மேலும் படிக்க | கமலின் 10 கேரக்டர்கள்-விஷ்ணுவின் 10 அவதாரங்கள்..’தசாவதாரம்’ படத்தில் ஒளிந்துள்ள ரகசியம்!

கேமராவில் சிக்கினர்..

சில வாரங்களுக்கு முன்னர் தமன்னாவும் விஜய் வர்மாவும்தான் பல பாலிவுட்டின் கிசுகிசு பக்கங்களில், தலைப்பு செய்தியாக மாறினர். காரணம், இவர்கள் இருவரும் ஒரு நாள் டின்னருக்காக வெளியில் சென்றுள்ளனர். அப்போது அவர்களை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளளனர். அதில், தமன்னா மற்றும் விஜய் காரில் ஏறி செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதையொட்டி, இவர்களுக்குள் இருக்கும் காதலை ரசிகர்களே உறுதி செய்தனர். இதற்கு முன்னர், இருவரும் 

காதலை உறுதி செய்த தமன்னா? 

நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், அவரிடம் திரை வாழ்க்கை குறித்தும் பர்சனல் வாழ்க்கை குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. இந்த நேர்காணலில் மணம் விட்டு பேசிய தமன்னா, தனது காதல் வாழ்க்கை குறித்தும் பேசினார். அப்போது, தனக்கு விஜய் வர்மாவை மிகவும் பிடிக்கும் என்றும் அவருடன் இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், தான் விஜய்யுடன் இருக்கும் போதுதான் தன்னையே மறந்து சிரிப்பதாகவும் கூறினார். “He is My happy place” என தமன்னா, விஜய் குறித்து அந்த நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால், ரசிகர்கள் பலர் தமன்னா தனக்குள் இருக்கும் காதலை உறுதிப்படுத்திவிட்டதாக எண்ணினர். 

“எனக்கு சிரிப்புதான் வருகிறது..”

தொடர்ந்து தனது காதல் வாழ்க்கை குறித்து பேசிய தமன்னா, “நான் காதலித்து வருவதாக கூறுகின்றனர். இதைப்பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. அனைவருக்கும் சொந்த வாழ்க்கை என்ற ஒன்று இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்..” என்று கூறியுள்ளார். இதனால், சில மணித்துளிகள் மகிழ்ச்சியாக இருந்த ரசிகர்கள் பிறகு வாடிய பூ போல மாறிவிட்டனர். 

திரையிலும் காதலர்கள்..நிஜத்திலும் காதலர்கள்..

லஸ்ட் ஸ்டோரிஸ் டீசரில், நடிகர் விஜய் வர்மா மற்றும் தமன்னா ஆகியோரை காதலர்கள் போன்று காட்சிப்படுத்தியுள்ளனர். உண்மையிலேயே இவர்கள் இருவரும் காதலர்கள்தான் என்று சில ரசிகர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர். சொல்லப்போனால், இருவரும் லஸ்ட் ஸ்டோரி படப்பிடிப்பின் போதுதான் காதலிக்க தொடங்கினர் என்று கூறப்படுகிறது. இவர்களது பேரிங்கை பார்க்கவே பல ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 

மேலும் படிக்க | சிறுவயதிலேயே சினிமா-இசைப்புயலின் உறவினர்..ஜி.வி.பிரகாஷ் குறித்த அறியாத தகவல்கள் இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News