சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி , ஊர்வசி உள்ளிட்டோர் நடித்து கடந்த 2020ஆம் ஆண்டு அமேசானில் வெளியான படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.சுவாரசியம் குறையாமல் நேர்த்தியான திரைக்கதையுடன், நடிகர்களின் சிறப்பான நடிப்புடன் தயாராகியிருந்த இப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. படம் வெளியானபோதே இந்தப் படத்துக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். குறிப்பாக சூர்யாவின் நடிப்புக்கு தேசிய விருது நிச்சயம் என ரசிகர்கள் ஆரூடம் கூறினர்.
மேலும் படிக்க | நீண்ட காத்திருப்புக்கு பிறகு வந்தது - தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷ் உருக்கம்
இந்நிலையில் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இது 2020ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கானது ஆகும். அதில், சிறந்த படமாக சூரறைப் போற்று தேர்வாகியுள்ளது.
மேலும், சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா, சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ் என மொத்தம் 5 தேசிய விருதுகளை சூரறைப் போற்று அள்ளியிருக்கிறது.
இந்தச் சூழலில் சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. அதாவது சூர்யாவுக்கு மேலாளராக இருக்கும் தங்கதுரை தேசிய விருது தேர்வுக்குழுவில் இருந்தார்.
அவரது பரிந்துரையின்பேரில்தான் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் ஒருதரப்பினர் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | ரொம்ப பெருமையா இருக்கு - விருதுகளை அள்ளிய சூரறைப் போற்றுக்கு தனுஷ் வாழ்த்து
அதேசமயம், சூரறைப் போற்று மிகச்சிறந்த படம். சூர்யாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதனால் அந்தப் படமும், சூர்யாவும் இந்த விருதுக்கு தகுதியானவர்கள்தான். சூர்யாவை விரும்பாத யாரோதான் இதுபோன்ற தகவலை பரப்புகிறார்கள் எனவும் மற்றொரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க | ஜெயிச்சிட்டோம் மாறா - தேசிய விருது வென்றார் சூர்யா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ