விருது மழை பொழிந்த சூர்யாவின் ‘சூரரைப் போற்று’- சர்வதேச பட விழாவில் சாதனை!

சூரரைப் போற்று படத்துக்காக சூர்யா சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 16, 2022, 05:48 PM IST
  • சூர்யா நடித்த சூரரைப் போற்று நேரடியாக ஓடிடியில் வெளியானது.
  • சூரரைப் போற்று படம் பல விருதுகளைக் குவித்துள்ளது.
  • சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளில் விருது.
விருது மழை பொழிந்த சூர்யாவின் ‘சூரரைப் போற்று’- சர்வதேச பட விழாவில் சாதனை! title=

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இப்படத்தை சூர்யாவின் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் இப்படம் வெளியானது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரிய நடிகர் ஒருவரின் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாவது அதுவே முதன்முறை எனும் காரணத்தால் இப்படம் தொடர்பாக திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சைகளும் வெடித்தன. இந்தச் சர்ச்சைகளைத் தொடர்ந்து  வெளியான இப்படம் நல்ல கவனத்தைப் பெற்றது.

                                          

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் இப்படம் வெளியானது. இந்நிலையில் இப்படம் ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை தற்போது வென்றுள்ளது. 2020ஆம் ஆண்டின் சிறந்த படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டிருப்பதுடன் சிறந்த நடிகர் விருதும் சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                               

மேலும் படிக்க | ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைக் கண்டுகளித்த முதலமைச்சர்- வைரல் புகைப்படங்கள்!

 

விருதுப் பட்டியல் இத்துடன் நிற்கவில்லை. இதன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளராகவும் சிறந்த இயக்குநராக சுதா கொங்கராவும் விருது வென்றுள்ளனர்.

சிறந்த கலை இயக்குநர் விருது ஜாக்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சிறந்த தயாரிப்பு நிறுவனத்துக்கான விருதையும் இப்படம் தட்டிச் சென்றுள்ளது. நடிகர் சூர்யாவின் ரசிகர்களின் சமூக வலைதளங்களில் இதனைப் பகிர்ந்து கொண்டாடிவருகின்றனர்.

மேலும் படிக்க | VJ சித்ராவைத் தொடர்ந்து மற்றொரு இளம் சீரியல் நடிகை மர்ம மரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News