சூர்யா நடித்துள்ள 'என்ஜிகே' படத்தின் முக்கிய அறிவிப்பு!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் டீசர் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.

Last Updated : Jan 25, 2019, 07:42 PM IST
சூர்யா நடித்துள்ள 'என்ஜிகே' படத்தின் முக்கிய அறிவிப்பு!  title=

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் டீசர் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.

 

 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. வெகு விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இந்த படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் டீசர் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.

Trending News