கங்குவா படத்துடன் மோதும் விஜய்யின் GOAT! ரிலீஸ் எப்போது தெரியுமா?

Kanguva vs GOAT: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் இருந்தும், விஜய் நடித்து வரும் GOAT படத்தில் இருந்தும் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Jan 16, 2024, 02:45 PM IST
  • கங்குவா படத்தின் செகண்ட் லுக்.
  • இரண்டு காலகட்டத்தில் கதை நடக்கிறது.
  • விரைவில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.
கங்குவா படத்துடன் மோதும் விஜய்யின் GOAT! ரிலீஸ் எப்போது தெரியுமா? title=

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் செகண்ட் லுக் மாட்டு பொங்கல் தினத்தையொட்டி இன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் சூர்யா இரண்டு தோற்றங்களில் காணப்படுகிறார். ஒன்று பிளாஷ்பேக்கில் போர்வீரன் தோற்றத்திலும், மற்றொரு லுக்கில் தற்போதைய தோற்றத்திலும் காணப்படுகிறார்.  இதன் மூலமா கங்குவா படம் பல காலகட்டங்களில் நடப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. கங்குவா செகண்ட் லுக்கை பகிர்ந்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், "காலத்தை விட ஒரு விதி வலிமையானது. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம். அனைத்தும் கங்குவா என்ற ஒரு பெயரை எதிரொலிக்கிறது" என்று குறிப்பிட்டு இருந்தது.  

மேலும் படிக்க | Dhanush Salary: ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

சில நாட்களுக்கு முன்பு கங்குவா படத்தில் தனது காட்சிகள் முடிந்து விட்டதாக சூர்யா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார்.  "கங்குவாவுக்காக எனது கடைசி ஷாட்! முழு யூனிட் பாசிட்டிவிட்டியால் நிரம்பியது! இது ஒன்றின் முடிவு மற்றும் பலவற்றின் ஆரம்பம்..! அனைத்து நினைவுகளுக்கும் அன்பான இயக்குனர் சிவா மற்றும் குழுவினருக்கு நன்றி! கங்குவா மிகப்பெரியது மற்றும் சிறப்பு. நீங்கள் அனைவரும் திரையில் பார்க்கும் வரை காத்திருக்க முடியாது!" என்று கூறி இருந்தார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது.  கங்குவா படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.  

படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின்பு மீண்டும் நடைபெற்றது.  இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் கங்குவா படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.  படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள மற்றொரு படமாக தங்களான் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.  இதனால் நிச்சயம் கங்குவா ஏப்ரல் மாதம் வெளியாகாது என்று தெரிய வந்துள்ளது.  

மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.  அதே சமயத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் The Greatest of All Time படமும் வெளியாக உள்ளது.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது.  மார்ச் மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.  விஜய்யின் GOAT படமும் ஜூன் மாதம் வெளியானால் கங்குவா படத்துடன் மோத நேரிடும்.  இருப்பினும் இரண்டு படங்களின் வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | கேப்டன் மில்லர் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன்: மூன்றே நாளில் இத்தனை கோடி வசூலா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News