சூர்யாவுக்கு பிறந்தநாள்: ரசிகர்களுக்கு ட்ரீட்!

Last Updated : Jul 23, 2017, 11:45 AM IST
சூர்யாவுக்கு பிறந்தநாள்: ரசிகர்களுக்கு ட்ரீட்! title=

தற்போதைய மாஸ் ஹீரோக்களில் அதிகளவில் ரசிகர் வட்டம் வைத்திருப்பவர் சூர்யா. இவர் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

ரசிகர்களுக்கு பிறந்தநாள் ஸ்பெஷலாக இவர் நடிக்கும் "தானா சேர்ந்த கூட்டம்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். 

சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம், ’தானா சேர்ந்த கூட்டம்’. ’நானும் ரவுடிதான்’ பட ஹிட்டுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஆக்‌ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் பிறந்த நாளான இன்று அதிகாலை, இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார். அதில்:- "25-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சூர்யா இளம் தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த பர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது. டிவிட்டரிலும் டிரெண்டாகி வருகிறது.

Trending News