சூர்யா 42 படத்தின் டைட்டில் “கங்குவா” – வெளியானது டைட்டில் டீசர்

Suriya 42 Is Titled Kanguva: சூர்யா – சிறுத்தை சிவா இணையும் படத்திற்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் டீசரை ஸ்டுடியோ க்ரீன் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 16, 2023, 09:51 AM IST
  • சூர்யா – சிறுத்தை சிவா இணையும் படம்.
  • படத்தின் டைட்டில் டீசர் யூட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது.
சூர்யா 42 படத்தின் டைட்டில் “கங்குவா” – வெளியானது டைட்டில் டீசர் title=

Suriya 42 Update: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், சூரரை போற்று உள்ளிட்ட படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சூரரை போற்று படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருந்தார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.  குறிப்பாக, சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஒப்பந்தமாகி தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். 

இந்த நிலையில் தற்போது "சூர்யா 42" படத்தின் டைட்டில் டீசரை ஸ்டுடியோ க்ரீன் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் இந்த படத்திற்கு "கங்குவா" என பெயரிடப்பட்டுள்ளது. நீண்ட நாளாக அப்டேட்டுக்கு காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு, படக்குழு இந்த தகவலை பகிர்ந்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அத்துடன் இந்த படத்தை 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது, சூர்யா நடிக்கும் முதல் 3டி தொழில்நுட்ப படம் இது. அது மட்டுமின்றி இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் உருவாகி வருகின்றது.

மேலும் படிக்க | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டுவிஸ்ட்.. டென்ஷனான சிவாங்கி, கடுப்பான செஃப்

இப்படத்தின் மோஷன் ஒரு பருந்தின் பார்வையில் போர்கள காட்சிகள் காட்டப்பட்டிருந்த நிலையில், சூர்யா கையில் ஆயுதங்கள் உடன் தோற்றமளித்தார். மேலும், இத்திரைப்படத்தில், சூர்யா 13 கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அத்துடன் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும் படிக்க | நொடிக்கு நொடி திருப்பம்... துப்பறியும் திரில்லர் - 'அவள் பெயர் ரஜினி' டீசருக்கு வரவேற்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News