சூர்யா - செல்வராகவன் படத்தின் பெயர் ஃபர்ஸ்ட் லுக்குடன் அறிவிப்பு!!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தனது 36_வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Mar 5, 2018, 06:39 PM IST
சூர்யா - செல்வராகவன் படத்தின் பெயர் ஃபர்ஸ்ட் லுக்குடன் அறிவிப்பு!! title=

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான நடிகர் சூர்யா "தானா சேர்ந்த கூட்டம்" படத்திற்கு பிறகு முதல் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது சூர்யாவுக்கு 36_வது படமாகும். 

இந்நிலையில், இன்று இயக்குனர் செல்வராகவனின் பிறந்த நாளைமுன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தந்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

படத்தின் தலைப்பு என்.ஜி.கே. என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Trending News