பிளாக்பஸ்டர் இயக்குனருடன் கூட்டணி சேரும் சிம்பு! தயாரிப்பு இந்த நிறுவனமா?

'கேஜிஎஃப்' படத்தை தயாரித்த ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிம்புவை நடிக்கவைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 22, 2022, 07:38 AM IST
  • சிம்பு நடித்த மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
  • தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.
  • அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
பிளாக்பஸ்டர் இயக்குனருடன் கூட்டணி சேரும் சிம்பு! தயாரிப்பு இந்த நிறுவனமா? title=

கடந்த சில ஆண்டுகளில் சிம்புவின் படங்கள் பெரிதாக ஓடாத நிலையில், சமீபத்தில் வெளியான மாநாடு படம் இவருக்கு அதிக புகழை தேடி தந்தது.  சிம்புவிற்கு நல்ல கம்பேக் கொடுக்கும் விதமாக அமைந்த இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார்.  இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா காம்போ அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.  'மாநாடு' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் சிம்புவிற்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் குவிந்து வந்தது.

மேலும் படிக்க | காதலில் விழுந்த நடிகர் சித்தார்த்... இந்த முறை யார் தெரியுமா?

தற்போது நடிகர் சிம்பு, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.  ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த படம் செப்டெம்பர்-15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  அதனைத்தொடர்ந்து தற்போது அவர் பத்து தல படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார், இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி ஷங்கர் உடன் நடிக்கின்றனர்.  இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, கேஜிஎப் மற்றும் சலார் போன்ற படங்களை தயாரித்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது,

Surya

மேலும் அந்த படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது, அவர் சூரரை போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கை முடித்தவுடன் இந்த ஆண்டின் இறுதியில் இந்த திட்டத்தை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்கவிருப்பதாகவும், அப்படம் அவர்களது கூட்டணியில் கடைசியாக வெளிவந்த படத்தை காட்டிலும் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  மேலும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | அருள்நிதி நடித்த தேஜாவு படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News