சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் கொரோனா வைரஸுக்கு (Corona Virus) எதிர்மறையாக பரிசோதித்துள்ளார், இப்போது அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என அவரது மகன் எஸ்.பி. சரண் (SP Charan) திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி ICU-வில் வென்டிலேட்டரில் இருந்தார்.
"எனது தந்தைக்கு அனைவரும் அளித்த தொடர்ச்சியான ஆதரவிற்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. எனது தந்தை நன்றாகவும் நிலையாகவும் இருக்கிறார். மேலும் அவரது கொரோனா வைரஸ் சோதனை எதிர்மறையாக வந்துள்ளது. மேலும் விவரங்களை அவ்வப்போது தெரிவிக்கிறேன்." என்று எஸ்.பி. சரண் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Good News : My father is fine and Stable and his Corona test has come Negative - #Charan #SPBalasubramanyam@charanproducer @PRO_Priya pic.twitter.com/Vsd48TAidc
— SPP Media Communication (@spp_media) August 24, 2020
எஸ்.பி.பாலசுப்ரமண்யம் (SP Balasubramaniam) சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி அவரது COVID-19 சோதனைகள் நேர்மறையாக வந்தன. அவருக்கு கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகள் இருந்தன. ஆனால் அவரது நிலை பின்னர் மோசமடைந்தது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, எஸ்.பி.பி தனது சமூக ஊடகங்களில் தனது தொற்றைப் பற்றி உறுதிப்படுத்தும் வீடியோவைப் பகிர்ந்தார். தனக்கு COVID-19 இன் லேசான அறிகுறிகள் இருப்பதாகக் கூறிய அவர், தனது குடும்பத்துக்கு தொற்று பரவாமல் தடுக்கவும், ஓய்வெடுத்து நல்ல முறையில் குணவடையுமே தான் மருத்துவமனையில் சேர முடிவு செய்ததாகக் கூறினார்.
ALSO READ: SPB-யின் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்ட மகன்... தற்போதைய நிலை என்ன?
அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், சிறந்த கவனிப்பைப் பெறுவதாகவும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு உறுதியளித்த எஸ்.பி.பி, தனக்காக கவலைப்பட வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
74 வயதான மூத்த பாடகரான எஸ்.பி.பி 16 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பல தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
எஸ்பி பாலசுப்பிரமண்யம் பின்னணி பாடகராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், திரைப்பட தயாரிப்பாளர் என பல பணிகளை செவ்வனே செய்துள்ள சகல கலா வல்லவன் ஆவார். குறிப்பாக, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இவர் அதிக பங்களிப்பை அளித்துள்ளார்.
எஸ்பிபி விரைவில் குணமடைய திரைப்பட பிரபலங்கள் உட்பட பலதரப்பட்ட மக்களும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.