உயிருக்கு போராடிய கொரோனா நோயாளிக்கு சோனு சூத் விமானம் அனுப்பி உதவி!

பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவரை நாக்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் அழைத்து வர சோனு சூத் உதவினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 4, 2021, 12:06 PM IST
உயிருக்கு போராடிய கொரோனா நோயாளிக்கு சோனு சூத் விமானம் அனுப்பி உதவி! title=

பாலிவுட் நடிகர் சோனு சூத் (Sonu Sood) கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். மேலும் கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு சேர பாலிவுட் நடிகர் சோனு சூத் உதவினார்.

இது இல்லாமல் நடிகர் சோனு சூத் (Sonu Sood) வெளிநாட்டில் தவித்த மாணவர்களை இந்தியா திரும்ப தனி விமானம், மொபைல் டவர் இல்லாமல் தவித்த பள்ளி மாணவர்களுக்கு மொபைல் டவர் என எண்ணற்ற உதவிகளைச் செய்து வருகிறார். அவரது உதவிகள் இந்த ஆண்டும் தொடர்ந்து வருகிறது. 

ALSO READ: Video: பொதுத்தேர்வை ரத்து செய்ய சோனு சூத் வலியுறுத்தல்!

இந்நிலையில் தற்போது அவர் கொரோனாவால் (Coronavirus) பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவரை நாக்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் அழைத்து வர உதவினார். மேலும் மீண்டும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட கைலாஷ் என்ற் 25 வயது பெண்ணுக்கு ஜான்ஸியிலிருந்து ஹைதராபாத்துக்கு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அழைத்து வர உதவியுள்ளார் நடிகர் சோனு சூத். 

இதையடுத்து பல மருத்துவமனைகளின் படியேறி இறங்கிய பெண்ணின் உறவினர்கள், இடம் கிடைக்காததால் கடும் அவதியுற்றனர். பின்னர் நடிகர் சோனு சூத்திடம் டிவிட்டர் மூலம் தங்களது வேதனையை கூறி உதவி கேட்டனர். இதையடுத்து ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இடம் இருப்பதை அறிந்த நடிகர் சோனு சூத், கைலாஷ் அகர்வாலை ஜான்சியில் இருந்து ஐதராபாத்துக்கு செல்ல தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

இதையடுத்து ஜான்சியில் இருந்து ஐதராபாத் வரழைக்கப்பட்ட பெண், தற்போது அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News