சிவாஜி குறித்து சிவகார்த்திகேயன் - வைரலாகும் ட்வீட்

சிவாஜி படம் குறித்த சிவகார்த்திகேயனின் ட்வீட் வைரலாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 16, 2022, 04:22 PM IST
  • சிவாஜி படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவு
  • 15 முறைக்கும் மேல் திரையரங்கில் சிவாஜி பார்த்த சிவகார்த்திகேயன்
 சிவாஜி குறித்து சிவகார்த்திகேயன் - வைரலாகும் ட்வீட் title=

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் சிவாஜி. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

2007ஆம் ஆண்டு வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர். மேலும் படத்தில் இடம்பெற்ற, “பன்னிங்கதான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாதான் வரும்”, “பேர கேட்டா சும்மா அதிருதில்ல” போன்ற பஞ்ச் வசனங்கள் இன்றுவரை ட்ரெண்டிங்கில் இருக்கின்றன.

Rajini

இந்தச் சூழலில் படம் வெளியாகி நேற்றுடன் 15 நிறைவடைந்தது. இதனால் ஏவிஎம் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவாஜி படத்தின் மேக்கிங் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. 

 

அதேபோல் இயக்குநர் ஷங்கரும் ரஜினியை நேரில் சந்தித்து படத்தின் நினைவுகளை பகிர்ந்துகொண்டார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார். மேலும் ரசிகர்களும் சிவாஜி படம் 15 வருடங்கள் நிறைவு செய்திருப்பதை சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்த்தனர்.

 

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான சிவகார்த்திகேயன் சிவாஜி படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சிவாஜி படத்தை 15 தடவைக்கு மேல் தியேட்டர்களில் பார்த்திருக்கிறேன். 

மேலும் படிக்க | நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்: வெடித்தது அடுத்த சர்ச்சை!

அது ஒரு அற்புதமான திரையரங்கு அனுபவம் . தலைவர் ரஜினிகாந்தின் சிறந்த ஸ்டைல்களில் இந்தப் படமும் ஒன்று.  இப்படி ஒரு மறக்க முடியாத படத்தை உருவாக்கிய இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News