ரஜினியின் செயலால் வருத்தத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன்?

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாவதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 5, 2023, 11:17 AM IST
  • மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி வெளியாகப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
  • ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகுகிறது.
  • மாவீரன் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டதாக படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
ரஜினியின் செயலால் வருத்தத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன்?  title=

தமிழ் திரையுலகில் பெரிதும் விரும்பப்படும் மற்றும் பிஸியான நடிகர்களுள் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயன் மாறிவிட்டார்.  தற்போது நடிகர் சிவகார்த்திகேயன், 'மண்டேலா' படத்தின் மூலம் பிரபலமான மடோன் அஷ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார், மேலும் இந்த படத்தில் சுனில், மிஷ்கின், கவுண்டமணி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.  இயக்குனருடன், நடிகருக்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் பணிகள் இடையிலேயே நிறுத்தப்பட்டதாக சில செய்திகள் வெளியானது.  அதன்பின்னர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.  இப்படம் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

மேலும் படிக்க | Jawan Release: மீண்டும் தள்ளிப்போன ஜவான் படத்தின் ரிலீஸ்..ஜெயிலருக்கு போட்டியாக வருகிறதா?

ஆனால் தற்போது சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படம், 'மாவீரன்' படத்தின் வெளியீட்டு தேதிக்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 10ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிப்புகள் வெளியானது.  படத்தின் வெளியீடு குறித்து சிவகார்த்திகேயன் சமீபத்திய பேட்டியொன்றில் கூறுகையில், 'மாவீரன்' படத்தின் வெளியீட்டு தேதி உறுதி தான் என்றும், ஆனால் 'ஜெயிலர்' படக்குழு இன்னும் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை என்று கூறியிருந்தார்.  இந்நிலையில் 'ஜெயிலர்' படக்குழு நேற்றைய தினம் 'ஜெயிலர்' படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டது.  சிவகார்த்திகேயன், ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர் என்பதாலும், மறுபுறம் நெல்சனும்-சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்கள் என்பதாலும் ஜெயிலர் படத்தோடு தனது படத்தை மோதவைக்க சிவகார்த்திகேயன் விரும்பமாட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  தற்போது படத்தின் வெளியீடு குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல்களின்படி, 'மாவீரன்' படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகப்போவதில்லை என்றும், அதற்கு முன்னதாகவே ஜூலை மாதம் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இருப்பினும் மாவீரன் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ஜெயிலர் படத்திற்கு முன்பே மாவீரன் படக்குழு ரிலீஸ் தேதியை வெளியிட்ட போதிலும், ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை அதே நேரத்தில் வைத்துள்ளதால் மாவீரன் படக்குழு வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜூலை மாதத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படமும் வெளியாகவுள்ளது, ஜூலை 28ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதற்கு முன்னதாகவே மாவீரன் படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.  மாவீரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் 'எஸ்கே21' படத்தில் நடிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடத்தப்படுகிறது, இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க,  படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

மேலும் படிக்க | முதல் முறையாக இணையும் ஜிவி பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியானது டைட்டில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News