இயக்குனராகும் சிவகார்த்திகேயன்! அதுவும் இவரது கதையிலா?

தமிழ்நாட்டை சேர்ந்த சிறந்த வேகப்பந்து வீச்சாளரான டி.நடராஜனின் வாழ்க்கை வரலாற்றை சிவகார்த்திகேயன் படமாக தயாரித்து, இயக்கி, நடிக்கவுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Dec 14, 2022, 10:13 AM IST
  • உருவாகிறது நடராஜனின் பயோபிக்.
  • சிவகார்த்திகேயன் இயக்கி நடிக்கிறார்.
  • விரைவில் படமாக உருவாக உள்ளது.
இயக்குனராகும் சிவகார்த்திகேயன்! அதுவும் இவரது கதையிலா?  title=

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி கலைஞராக என்ட்ரி ஆகி பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக கலக்கி அதன் பின்னர் நடிகராக உருவெடுத்தவர் தான் சிவகார்த்திகேயன்.  தனது நகைச்சுவையான பேச்சால் பல ரசிகர்களையும் கவர்ந்துள்ளார், இவருக்கு பெரியவர்களை காட்டிலும் ஏராளமான குழந்தைகள் ரசிகர்களாக இருக்கின்றனர்.  நடிகரானது மட்டுமின்றி பாடலாசிரியர், பின்னணி பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பல வழிகளில் தனது திறமையை கட்டி ஜொலித்து கொண்டிருக்கிறார்.  தற்போது வெளியாகியுள்ள சில செய்திகளின்படி நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனராக புதிய பரிமாணத்தில் தோன்ற இருக்கிறார்.  இந்த செய்தி அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.

மேலும் படிக்க | உங்களை சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகனாக மாற்றும் ரஜினிகாந்தின் 10 படங்கள்!

தமிழ்நாட்டை சேர்ந்த சிறந்த வேகப்பந்து வீச்சாளரான டி.நடராஜன் தான் சிவகார்த்திகேயன் இயக்குனராக போகும் செய்தியை தெரிவித்துள்ளார்.  சமீபத்திய பேட்டியொன்றில் பேசியவர், தனது வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது என்றும் தனது கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.  மேலும் பேசியவர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மட்டுமின்றி அந்த படத்தையும் அவரே இயக்குகிறார் என்று கூறியுள்ளார்.  மேலும் தான் ஐபிஎல் 2023ல் சிறப்பாக விளையாடி எனது இடத்தை மீண்டும் பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் மிக தீவிரமான கிரிக்கெட் ரசிகர் என்பது நன்கு தெரிந்த ஒன்று.  'கனா' படத்தில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும், கிரிக்கெட் கோச் ஆகவும் நடித்து அசத்தியிருந்தார்.  இதனை வைத்து பார்க்கும்போது கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது சிவகார்த்திகேயனுக்கு எளிதாக இருக்கும்.  தற்போது சிவகார்த்திகேயன் மடோன் அஷ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார்.  அதன் பின்னர் அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடைக்கும் 'அயலான்' படம் 2023ம் ஆண்டு வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | தளபதி 67 படத்தில் இத்தனை மாஸ் ஹீரோக்களா.. வெளியான மாஸ் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News