ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் முக்கிய அட்வைஸ்

தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ரசிகர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தி உள்ளார்.கொரோனா 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 31, 2021, 02:37 PM IST
  • தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
  • கொரோனா தடுப்பூசியும் பொதுமக்களுக்கு தொடர்ந்து போடப்பட்டு வருகிறது.
  • ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சிவகார்த்திகேயன்
ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் முக்கிய அட்வைஸ் title=

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இத்துடன் கொரோனா தடுப்பூசியும் பொதுமக்களுக்கு தொடர்ந்து போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு (Lockdown) நாட்களில் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படி நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது.,

ALSO READ | இதுதான் நடிகர் சூரியின் கொரோனா தடுப்பூசி அனுபவம்

என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து இந்த ஊரடங்கு காலத்தில் வெளியே போக வேண்டும். எப்போதும் முககவசம் அணிந்து கொள்ளுங்கள். இரட்டை முககவசம் போடச் சொல்கிறார்கள். அதையும் அணியுங்கள். 

முககவசத்தை சரியாக அணிந்து கொரோனாவிலிருந்து தப்பியவர்களை பார்த்திருக்கிறேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். முக்கியமான வேலை இருந்தால், அதற்கு மட்டும் வெளியே சென்றுவிட்டு, உடனே வீட்டிற்கு வந்து விடுங்கள். கொரோனா சீக்கிரமாக முடிந்துவிடும். எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். 

உடம்பை கவனித்து கொள்ளுங்கள். கொரோனா பாதிப்பு அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது என்று கேள்விப்படுகிறேன். நீங்கள் பத்திரமாக இருந்தீர்கள் என்றாலே, இது பெரிய பிரச்சினையே இல்லை. சீக்கிரமே அனைத்தும் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News