சிம்பு நடிப்பில் தமிழில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியலில் 'பத்து தல' படமும் ஒன்று. கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த 'பத்து தல' படம். இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் கேங்ஸ்டராக நடிக்க, கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபேலி என் கிருஷ்ணா மற்றும் நார்தன் ஆகியோர் சிம்பு நடிக்கும் 'பாத்து தல' படத்தை இயக்குகிறார்.
மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய் ஓட்டும் பைக்கின் விலை இத்தனை லட்சமா!
இந்த சிம்புவின் போர்ஷன்கள் நிலுவையில் உள்ளதாகவும், மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும் ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனால் மீண்டும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரின் உடல்நலப் பிரச்சனை காரணமாக இதில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, நடிகர் சிம்பு அமெரிக்காவில் இருப்பதாகவும், ஜூலை மாதம் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 45 நாட்கள் வரை நடைபெற இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என்று கூறப்படுகிறது. அதன்தொடர்ந்து படத்தின் முழு பணிகளும் நிறைவு செய்யப்பட்டு படத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தையொட்டி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 'பத்து தல' படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷியபுத்திரன் மற்றும் டீஜேய் ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
மேலும் படிக்க | நடிகர் சூர்யாவின் மகள் தியா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR