இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காரணமானார். இலங்கையில் அவர் பித்தப்பை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நோயின் இறுதிக் கட்டத்தில் கண்டறியப்பட்டதால், சிகிச்சை தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு ஒரு வாரம் முன்பு தான் பவதாரிணி சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். கொழும்பு நகரில் பவதாரணிக்கு ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. பவதாரணிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நிலை மோசமான நிலையில் அவர் கொழும்பு லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தபோது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் பவதாரிணி உயிரிழந்தார் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சிறிது காலம் முன்னதாக கண்டறியப்பட்டிருந்தால், பவதாரணியின் நோய் அவரை பலி வாங்கியிருக்காது.
பவதாரணியை புற்றுநோய் தாக்கியது பற்றி ஒரு மாதம் முன்னர் தான் தெரியவந்துள்ளது. நீரிழப்பு பிரச்சனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது மேற்கொண்ட பரிசோதனையில் தான் பித்தப்பையில் புற்றுநோய் இருப்பது தெரிந்துள்ளது. புற்றுநோய் நுரையீரல் வரை முழுவதுமாகப் பரவி விட்ட நிலையில் சிகிச்சை பலன் தருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவர் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்று உள்ளார். ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்காத நிலையில் இலங்கையில் காலமானார். 47 வயதான பவதாரணி 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். இசையமைப்பாளர் இளையராஜாவின் அன்பு மகளின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
மேலும் படிக்க | கொஞ்ச நாள் பொறு தலைவா.. கோவையில் தேவாவின் இசைக்கச்சேரி
சில ஆண்டுகளுக்கு முன்னர் பவதாரணியின் தாய் ஜீவா உயிரிழந்த பிறகு, தந்தைக்கு மிகவும் ஆறுதலாக இருந்தார் பவதாரணி. மனைவிக்கு பிறகு தற்போது அன்பு மகளையும் இழந்து வாடும் இளையராஜாவிற்கு பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
மறைந்த பாடகி பவதாரணியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சொத்து மதிப்பு
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணிக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் குழந்தைகள் யாரும் இல்லை. தற்போது அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 30க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடியவர், தேசிய விருது பெற்ற பாடகி, இளையராஜாவின் மகள் பாவதாரிணியின் சொத்து மதிப்பு 300 முதல் 350 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருமண வாழ்க்கை
2005 ஆம் ஆண்டு பவதாரணிக்கும் சபரி ராஜன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. பவதாரணியின் கணவர் சபரி ராஜன் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். அவரும் தனது மனைவியின் பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளார். நீண்ட இடைவேளைக்குப்பின் 3 திரைப்படங்களுக்கு பவதாரிணி இசையமைத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ