ஐதராபாத் நகரில் உள்ள மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா மாநில துணை முதல் மந்திரி முஹம்மது மஹ்மூத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இவ்விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு "டாக்டர்" பட்டம் வழங்கப்பட்டது.
இந்த கவுரவத்துக்கு நன்றி தெரிவித்து பேசிய ஷாருக் கான், ‘ஐதராபாத் எனது தாயார் பிறந்த இடம் என்பதால் இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் இந்த பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்திருப்பார்’ என்று தெரிவித்தார்.