கே.ஜி.எப்-2 படத்தில் நடித்திருக்கும் முக்கிய தமிழ் நடிகர்! சஸ்பென்ஸ் வைத்த படக்குழு!

கே.ஜி.எப்-2 படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2022, 06:32 PM IST
  • கே.ஜி.எப் படம் பீஸ்ட் படத்துடன் மோத உள்ளது.
  • நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.
  • இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
கே.ஜி.எப்-2 படத்தில் நடித்திருக்கும் முக்கிய தமிழ் நடிகர்! சஸ்பென்ஸ் வைத்த படக்குழு! title=

கடந்த 2018ம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிநடைபோட்ட 'கே.ஜி.எப்' படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.  நேற்றைய தினம் மிரட்டலாக வெளியான இப்படத்தின் டிரெய்லரும் ரசிகர்களை பிரம்மிக்க வைத்திருக்கிறது. அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் விஜய்யின் 'பீஸ்ட்' படத்திற்கு போட்டியாக களமிறங்க உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்ததிலிருந்து இணையத்தில் கே.ஜி.எப் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் மோதல் அனலாய் பறந்து வருகிறது.  இந்நிலையில் வெளியான ட்ரெய்லர் மூலம் ஒரு முக்கிய தமிழ் நடிகர் இப்படத்தில் நடித்திருப்பது புலப்படுகிறது.

kgf

மேலும் படிக்க | ஓடிடி-யில் யாராலும் தொடமுடியாத புதிய சாதனை படைத்த வலிமை!

'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்து இருந்த சந்தோஷ் பிரதாப் கே.ஜி.எப்-2 படத்தில் நடித்துள்ளார். 'கதை திரைக்கதை வசனம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவரை அதிக பிரபலமாக்கியது சார்பட்டா பரம்பரை படம் தான்.  குத்துசண்டையை கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் சிறந்த வரவேற்பை பெற்றது.  தற்போது இவர் கே.ஜி.எப்-2 படத்தின் ட்ரெய்லரின் தொடக்கத்தில் இவர் ஆக்ரோஷமாக நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.  முதல் பாகத்திலும் இவர் நடித்து இருந்தாலும், யாரும் பெரிதாய் இவரை கண்டுகொள்ளவில்லை.  இந்நிலையில் கே.ஜி.எப்-2 படத்தில் இவரது கேரக்டர் பெரிதும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

நேற்று நடைபெற கே.ஜி.எப்-2 விழாவில் பேசிய யாஷ், பீஸ்ட் படத்துடன் கே.ஜி.எப்-2 மோதுகிறது என்று சொல்ல வேண்டாம்.  இரண்டு படங்களும் வெளியாகிறது என்று கூறலாம்.  நான் விஜய் சாரின் பெரிய ரசிகன்.  கண்டிப்பாக பீஸ்ட் படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் என்று கூறினார்.  பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது.  இதுவரை பீஸ்ட் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் படிக்க | பற்றி எரியும் Beast VS KGF-2: விஜய் குறித்து என்ன சொன்னார் யஷ்?!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News