யசோதா படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

சமந்தா நடித்துள்ள யசோதா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Nov 11, 2022, 01:28 PM IST
  • யசோதா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
  • சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ளது.
யசோதா படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்! title=

கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் முக்கியமான நடிகையாக வளர்ந்துள்ளார் சமந்தா. அவரது நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் யசோதா படம் வெளியாகி உள்ளது. ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் என இரண்டு பேர் இந்த படத்தை இயக்கி உள்ளனர். வரலட்சுமி சரத்குமார், முகுந்தன், சம்பத்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | பிரபல நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 250 சவரன் நகை கொள்ளை... வாட்ச்மேன் உடந்தையா?

yasodha

பண தேவைக்காக வாடகை தாயாக சமந்தா மருத்துவமனைக்கு செல்கிறார், அங்கு அவரைப் போலவே பல பெண்களும் உள்ளனர். ஆனால் அங்கு வாடகை தாயாக வரும் பெண்களை வைத்து அவர்கள் வேறு ஏதோ சதித்திட்டம் செய்கிறார்கள் என்பது சமந்தாவிற்கு பெரிய வருகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் சதி திட்டங்களை கண்டுபிடித்தாரா? இறுதியில் சமந்தாவிற்கு என்ன ஆனது என்பதே யசோதா படத்தின் ஒன் லைன். முழுக்க முழுக்க இது சமந்தாவின் படம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கடும் உழைப்பையும், நடிப்பையும் கொடுத்துள்ளார்.

சண்டைக் காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் அவரது தேர்ந்த நடிப்பு படத்திற்கு பக்கபலமாக உள்ளது. இரண்டாம் பாதியில் வரும் டிரான்ஸ்பர்மேஷன் காட்சிகளில் சமந்தாவிற்கு விசில் பறக்கிறது. சர்க்கார் படத்தை தொடர்ந்து நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நன்றாக நடித்துள்ளார். படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையானதை கொடுத்துள்ளனர்.  

sam

இயக்குனர்கள் ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் யசோதா கதைக்காக மெனக்கெட்டு வேலை செய்துள்ளனர் என்பது திரையில் தெரிகிறது. கேமரா ஒர்க் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. யசோதா படத்தின் பெரும் பகுதி செட்டுகுள் மட்டுமே நடக்கிறது. இருப்பினும் செட் ஒர்க் பெரிதாக கண்ணன் உறுத்தும் அளவிற்கு இல்லாமல் உள்ளது. கிராபிக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். சமந்தா ஒவ்வொன்றாக கண்டுபிடிப்பது, அதை அவர் எப்படி செய்கிறார் என்பது சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட் யாரும் எதிர்பார்க்காத விதமாக சர்ப்ரைஸ் ஆக இருந்தது பாராட்டுக்குரியது. யசோதா - ஜொலிக்கிறார்.

மேலும் படிக்க | ஆடை சர்ச்சை...வீடியோவில் பொய் சொன்ன சதீஷ் - பதிலடி கொடுத்த தர்ஷா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News