கோவா பீச்சில் உல்லாசம்; நீச்சல் உடையில் நடிகை சமந்தா

கோவா பீச்சில் நீச்சல் செம கிளாமர் உடையில் இருக்கும் சமந்தாவின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2021, 06:38 AM IST
கோவா பீச்சில் உல்லாசம்; நீச்சல் உடையில் நடிகை சமந்தா title=

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார். 

அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அத்துடன் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் (Kaathu Vaakula Rendu Kaadhal) படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். அதேபோல் ராஜ் & டிகே இயக்கும் தொடரில் சமந்தா (Samantha) நடிக்க உள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாது. இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அரங்கிலும் கூட இது மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த அதிரடித் தொடரின் பெண் கதாநாயகியாக நடிப்பதற்கு பல தேடுதலுக்கு பிறகு நடிகை சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாது.

ALSO READ | ரிலீசுக்கு பிறகும் சர்ச்சையில் சிக்கிய 'மாநாடு'!

அதோடு, சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஐட்டம் பாடலில் ஓ சொல்றியா பாடல் ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது. அதன்படி இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் சமந்தா படுகவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 20 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் தோழிகளுடன் கோவா சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் உடையில் எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதில் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்த புகைப்படம் 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று வேற லெவலில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

ALSO READ | சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் முன்னாள் காதலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News