இணையத்தில் வைரலாகும் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் போஸ்ட்!

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள போஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 24, 2022, 04:15 PM IST
  • சமந்தா தற்போது குஷி படத்தில் நடித்து வருகிறார்.
  • காஸ்மீரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
  • நாக சைதன்யா மஜிலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இணையத்தில் வைரலாகும் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் போஸ்ட்! title=

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரின் மணமுறிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இருவரும் ஒருமனதாக பிரிவதாக வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு அதிர்ச்சியை அளித்தது.  நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் ஒருவரையொருவர் பிரிந்த பின்னர் அவர்களது பணிகளில் கவனத்தை செலுத்த தொடங்கி பிசியாகி விட்டனர்.  சமந்தா பல விளம்பர படங்களில் நடிப்பது, புதிய படங்களில் கமிட்டாவது என்று படுபிஸியாகி விட்டார், அதேபோல நாக சைதன்யாவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாகி விட்டார்.

மேலும் படிக்க | கெளதம் மேனன் பட நாயகியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்?- அதுவும் இப்படியான ரோலா?!

நடிகை சமந்தா தற்போது டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டு இருக்கிறார்.  சைதன்யா இந்த வருடத்தில் பாலிவுட் பக்கம் களமிறங்கியிருக்கிறார்.  தற்போது இவர்கள் இருவரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் அவர்களின் அடுத்த பிராஜெக்ட் பற்றிய தகவல்களை ரசிகர்களின் பார்வைக்காக பகிர்ந்து கொண்டுள்ளனர்.  இவர்கள் இருவரது சமூக வலைதள பதிவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சமந்தா அவரது சமூக வலைதள பக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் 'குஷி' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்களையும், 'மஜிலி' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.  அதேபோல நடிகர் நாக சைதன்யாவும் மனம் படம் வெளியாகி எட்டு வருடங்கள் நிறைவுபெற்றதை கொண்டாடியவர், இயக்குனர் விக்ரமுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் 'தேங்க் யூ' படத்தின் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.  ஒரே நாளில் இருவரும் அவர்களது படப்பிடிப்பு தளங்களின் புகைப்படங்களை பகிர்ந்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் படிக்க | 'விக்ரம்' படத்தின் கதை ரஜினிக்காக எழுதப்பட்டதா? வெளியான தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News