ராக்கெட்ரி படத்தின் தகவல்கள் பொய்யானவை - பரபரப்பை கிளப்பும் விஞ்ஞானிகள்

ராக்கெட்ரி படத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் 90 சதவீதம் பொய்யானவை என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 27, 2022, 03:27 PM IST
  • ராக்கெட்ரி படம் சமீபத்தில் வெளியானது
  • மாதவன் இயக்கி நடித்திருந்தார்
  • படத்தின் தகவல்கள் பொய் என விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர்
 ராக்கெட்ரி படத்தின் தகவல்கள் பொய்யானவை - பரபரப்பை கிளப்பும் விஞ்ஞானிகள் title=

நடிகர் மாதவன் இயக்குநர் அவதாரம் எடுத்த படம் ராக்கெட்ரி. நாட்டின் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றுவிட்டதாக போலி புகார் அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி படம் எடுக்கப்பட்டிருந்தது. நம்பி நாரயணனாக மாதவன், அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருந்த இப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். சாம் சி.எஸ். இசையமைத்தார்.அதேபோல் ஹிந்தி பதிப்பில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்தார். இருவரும் சம்பளமே வாங்காமல் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரும் எதிர்பார்ப்போடு பான் இந்தியா படமாக வெளியான ராக்கெட்ரி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதுமட்டுமின்றி, ராக்கெட் பற்றி மாதவன் எந்த வித சமரசமும் செய்யாமல் எடுத்திருக்கிறார். ஆனால் ராக்கெட் தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் இன்னமும் ரசிகர்களுக்கு புரியும்படி எடுத்திருக்கலாம் என்றும்; நம்பி நாராயணன் நடத்திய சட்டப்போராட்டம் பற்றி படத்தில் காட்சிகள் இல்லாதது படத்திற்கு மைனஸ் என்றும் விமர்சகர்கள் கூறினர். மேலும் படத்தை இயக்கியதில் மாதவனிடம் சில மைனஸ்கள் தென்பட்டதாகவும் பேச்சு எழுந்தது.

Madhavan

இந்நிலையில், ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தில் கூறப்பட்ட தகவல்களில் 90 சதவீதம் பொய்யானவை' என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏ.இ.முத்துநாயகம், இ.வி.எஸ்.நம்பூதிரி, டி.சசிகுமாரன் உள்ளிட்டோர் இந்த விவகாரம் குறித்து பேசுகையில்,  "விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று சினிமாவில் 90 சதவீதம் தவறான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. இஸ்ரோவில் பணியாற்றி, குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்த அப்துல்கலாமின் தவறை திருத்தியதாக கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல். 

மேலும் படிக்க | நாங்கள் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் - தொழிலதிபர் பெருமிதம்

அதுமட்டுமின்றி, தான் கைது செய்யப்பட்டதால்தான் இந்தியாவுக்கு கிரையோஜெனிக் தொழில் நுட்பம் தாமதமாக கிடைத்தது என்று முற்றிலும் ஆதாரமற்ற தகவலை இந்த திரைப்படத்தில் கூறியுள்ளனர். நாராயணனுக்கும் கிரையோஜெனிக் திட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றனர்.

மேலும் படிக்க | பா. இரஞ்சித் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News