டாடாவை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்

ஒலிம்பியா மூவிஸ் S. அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின்- அபர்ணா தாஸ் நடிக்கும் 'டாடா' படத்தை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jan 1, 2023, 03:13 PM IST
  • கவின் நடிப்பில் டாடா படம் உருவாகியுள்ளது
  • அபர்ணா தாஸ் ஹீரோயினாக நடித்துள்ளார்
  • ரெட் ஜெயண்ட் படத்தை வெளியிடுகிறது
டாடாவை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் title=

அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் நிறுவனம் ரெட் ஜெயண்ட் மூவிஸ். குருவி படத்தை தயாரித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்த ரெட் ஜெயண்ட் தொடர்ந்து பல வருடங்களாக படங்களை தயாரித்தும், வெளியிட்டும்வருகின்றது. எவ்வளவுக்கு எவ்வளவு படங்களை தயாரித்து வெளியிட்டாலும் பல படங்களை வலுக்கட்டாயமாக கைப்பற்றுவதாக விமர்சனங்களும் எழுந்தும்வருகின்றன. அதேசமயம் அப்படிப்பட்ட குற்றச்சாட்டை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மறுத்துவருகிறது.

சமீபத்தில் தமிழ் சினிமாவில் விக்ரம், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. அந்தவகையில் துணிவு படத்தையும் அந்த நிறுவனம் வெளியிடவிருக்கிறது. 

இந்நிலையில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடித்திருக்கும் டாடா படத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறது. 'டாடா' திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் படத்தின் முதல் பார்வை மற்றும் வெளியாகியுள்ள பாடல்கள் இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. இந்த நிலையில், படத்தினை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. 

மேலும் படிக்க | Trademark சிரிப்புடன் ரஜினி... ரசிகர்கள் ஹேப்பி - போய்ஸ் கார்டனில் புத்தாண்டு சந்திப்பு

அழகான ரொமாண்டிக் எண்டர்டெயினர் படமான 'டாடா' சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கணேஷ் K பாபு எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் S. அம்பேத் குமார் தயாரிக்கிறார்.  படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் மற்றும் திரையரங்குகளில் வெளியீட்டு தேதி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தூள் கிளப்பும் துணிவு டிரைலர்... வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?

மேலும் படிக்க | கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலனு தெரியல - விரக்தியில் செல்வராகவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News