விஜய்யின் ‘வாரிசு’ போஸ்டர்ஸ் 6.01 PM, 11.44 PMக்கு வெளியானது ஏன் தெரியுமா?

விஜய்  நடித்துவரும் வாரிசு படத்தின் போஸ்டர்கள் நேற்று முதல் வெளியாகி வருகின்றன. விஜய்யின் பிறந்த நாளையொட்டி, நேற்று மாலை 6.01க்கு இதன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆனது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 22, 2022, 04:41 PM IST
  • நடிகர் விஜய் நடித்துவரும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21 மாலை 06.01க்கு வெளியானது.
  • வாரிசு படத்தின் இரண்டாவது லுக் இன்று காலை 11.44 மணிக்கு வெளியானது.
  • வாரிசு படத்தின் போஸ்டர்ஸ் ரிலீஸ் நேரத் தேர்வு பற்றிய சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் ‘வாரிசு’ போஸ்டர்ஸ் 6.01 PM, 11.44 PMக்கு வெளியானது ஏன் தெரியுமா? title=

விஜய்  நடித்துவரும் வாரிசு படத்தின் போஸ்டர்கள் நேற்று முதல் வெளியாகி வருகின்றன. விஜய்யின் பிறந்த நாளையொட்டி, நேற்று மாலை 6.01க்கு இதன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆனது.

இதையடுத்து இதன் இரண்டாவது போஸ்டர் இன்று காலை 11.44 மணிக்கு  வெளியானது. முதல் போஸ்டரில் விஜய் மட்டும் சோலாவாக இருந்த நிலையில், இரண்டாவது போஸ்டரில் சிறுவர் சிறுமிகளுடன் விஜய் ஃபன் செய்வதுபோல அமைந்துள்ளது.

இவ்விரு போஸ்டர்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதன் அடுத்த போஸ்டர் இன்று மாலை 5.02க்கு வெளியாகவுள்ளது. பொதுவாக படம் தொடர்பான அறிவிப்புகள் 6 மணி, 12 மணி, 5 மணி, 7 மணி என ஏதேனும் ஒரு மணியின் தொடக்கத்தில் வெளியிடப்படுவதுதான் வழக்கம்.

ஆனால் வாரிசு படத்தின் போஸ்டர்களை ரிலீஸ் செய்வதற்கு சற்று வித்தியாசமாக 6.01, 11.44 , 5.02 எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பலருக்கும் புரியாத புதிராக இருந்துவருகிறது. இது ஏன் எனவும் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பான சுவாரஸ்யத் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, போஸ்டர் ரிலீசுக்கான நேரத் தேர்வுகள் அனைத்தும் ‘10' என்ற எண்னை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன.

6.01 PM ஐ 24 மணி நேரக் கணக்கில் கொண்டால் 18.01. அதன்படி, 1+8+0+1= 10 எனவும் 11.44 PM  1+1+4+4= 10 எனவும் அமைந்துள்ளது. அதேபோல மூன்றாவது போஸ்டருக்கான நேரம் 5.02 PM - அதாவது 17.02 ஆனது 1+7+0+2= 10 என அமைந்துள்ளது.

மேலும் படிக்க | விஜய்- அஜித் காம்போவில் பான் இந்தியா படம்? வெளியான உண்மைத் தகவல்!

இதுமட்டுமல்ல; ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டது கூட 04:06 மணிக்குத்தான் (0+4+0+6 =10). 

அந்த வகையில், 10 என்ற எண்ணோ அல்லது ஒன்று (1+0= 1) என்ற எண்ணோ படக்குழுவுக்குச் செண்டிமெண்டாக இருக்கலாம் எனவும் அந்த அடிப்படியில்தான் இந்தந்த நேரங்களில் போஸ்டர்களை வெளியிட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சாதாரண விஜய்யை 'சாம்ராட்' விஜய்யாக மாற்றிய 5 படங்கள்! # HBD Vijay

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News