புஷ்பா பட கெட்டப்பில் கலக்கும் திருப்பதி எம்பி! வைரலாகும் புகைப்படம்!

Pushpa update: 'புஷ்பா: தி ரூல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற அல்லு அர்ஜுனின் கெட்டப் போன்று திருப்பதி எம்பி குருமூர்த்தி கெட்டப் போட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 19, 2023, 09:20 AM IST
  • 'புஷ்பா: தி ரூல்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
  • திருப்பதி எம்பி குருமூர்த்தி அல்லு அர்ஜுனின் லுக்கை ரீக்ரியேட் செய்து இருக்கிறார்.
  • திருப்பதி எம்பி குருமூர்த்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புஷ்பா பட கெட்டப்பில் கலக்கும் திருப்பதி எம்பி! வைரலாகும் புகைப்படம்! title=

Pushpa update: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டில் வெளியான 'புஷ்பா:தி ரைஸ்' படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளி குவித்தது.  இப்படம் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.  தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிர்கர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.  புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஜெகபதி பாபு, ஹரிஷ் உத்தமன் போன்ற பலர் நடித்திருந்தனர்.  சமந்தா நடனமாடிய 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.  புஷ்பா முதல் பாகத்தின் வெற்றிக்கு பின்னர் 'புஷ்பா-2' குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தனர்.  அதன்படி படத்தின் அறிவிப்பும் வெளியானது, மறுபுறம் இப்படத்தில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்கிற ஆவல் ரசிகர்களிடையே இருந்து வந்தது.

pushap

மேலும் படிக்க | Modern Love Chennai: இசைஞானிக்கு குவியும் பாராட்டு..மாடர்ன் லவ் சென்னை தொடரை நம்பி பார்க்கலாமா? ட்விட்டர் விமர்சனம் இதோ!

இந்நிலையில் சமீபத்தில் வெளியான 'புஷ்பா: தி ரூல்' படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.  இந்த போஸ்டரில் அல்லு அர்ஜுனின் தோற்றம் இதுவரை இல்லாத அளவில் வழக்கத்திற்கு மாறாக இருந்து அனைவரையும் கவர்ந்துள்ளது.  அல்லு அர்ஜுனின் இந்த புதிய தோற்றம் பல ரசிகர்களையும் கவர்ந்திருந்த நிலையில், இந்த லுக் திருப்பதி எம்பி ஒருவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது.  அல்லு அர்ஜுனின் இந்த லுக்கை திருப்பதி எம்பி ரீக்ரியேட் செய்து இருக்கிறார்.  திருப்பதி எம்பி குருமூர்த்தி அல்லு அர்ஜுன் போலவே நகை, உடை அணிந்துகொண்டும், தனது உடம்பில் ஊதா நிறத்தில் வர்ணம் பூசிக்கொண்டும் அல்லு அர்ஜுனின் லுக்கை ரீக்ரியேட் செய்து இருக்கிறார்.  அல்லு அர்ஜுன் கெட்டப்பில் திருப்பதி எம்பி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது. உண்மையாகவே இந்த தோற்றம் சித்தூர் மாவட்டத்தின் கங்கம்மா ஜாதரா பகுதியில் 'மாதங்கி' கொண்டாடுபவர்களுக்கு உரியது என்றாலும், இந்த தோற்றம் 'புஷ்பா:தி ரூல்' படத்தில் அல்லு அர்ஜுன் இடம்பெற்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பிறகு தான் பிரபலமாகியுள்ளது.

இந்திய திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய படங்களில் ஒன்று தான் 'புஷ்பா: தி ரூல்', ஏற்கனவே ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வந்த நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து இருக்கிறது.  இப்படத்தின் ஆடியோ உரிமை ரூ.65 கோடிக்கு விற்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது.  'புஷ்பா: தி ரூல்' படத்தில் ராஷ்மிகா கதாபாத்திரம் இருக்காது என்று சில வதந்திகள் வெளியானது ஆனால் அதன் பின்னர் படத்தில் ராஷ்மிகா நடிப்பது உறுதி என்று செய்திகள் வெளியானது.  முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனின் காதலியாக ராஷ்மிகா இருந்தார், இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனின் மனைவியாக ராஷ்மிகா இருப்பார் என்று கூறப்பட்டது.   

மேலும் படிக்க | Aishwarya Rajesh: “ராஷ்மிகாவை நான் குறைகூறவில்லை..” புஷ்பா பட ஸ்ரீவள்ளி சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News