சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம், போர் தொழில். இதில் நாயகனாக நடித்திருந்தவர் அசோக் செல்வன். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அசோக் செல்வன்:
2013ஆம் ஆண்டு நளன் குமாரசாமி இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமானவர், அசோக செல்வன். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இவருடன் சேர்ந்து நடித்திருப்பர். இதற்கு முன்னர் இவரது முகம் பில்லா படத்தில் அஜித்தின் சிறுவயது புகைப்படமாக காண்பிக்கப்பட்டிருக்கும். நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கும் நாயகர்களுள் இவரும் ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்த தெகடி, கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் போன்ற படங்கள் ரசிகர்கள் இடையே கவனத்தை ஈர்த்தது. கடைசியாக இவர் நடித்திருந்த போர் தொழில் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு ரஜினி ரசிகராக மாறிய விஜய்யின் மகன்..!
நடிகையுடன் காதல்..?
நடிகர் அசோக செல்வன், ‘தெகிடி’ படம் வெளிவந்த போதிருந்தே பல தமிழ் பெண்களுக்கு க்ரஷ் மெட்டீரியலாக இருந்து வருகிறார். குறிப்பாக ஓ மை கடவுளே மற்றும் போர் தொழில் படங்களுக்கு பிறகு இவரை பலர் மானசீக காதலனாகவே ஏற்றுக்கொண்டனர். இவர், போர் தொழில் படத்திற்கு பிறகு பல ஊடக நிகழ்ச்சிகளில் கலந்து காெண்டார். அப்போது ஒரு பெண் தாலியுடன் வந்து இவருக்கு ப்ரபோஸ் செய்துவிட்டார். அந்த அளவிற்கு சில பெண்களை கிருக்காக மாற்றி வைத்திருக்கிறார், அசோக். இவர் சில நாட்களுக்கு முன்பு கொடுத்திருந்த நேர்காணலில், தான் திருமணம் செய்து கொண்டால் காதல் திருமணம்தான் செய்வேன் என்று உறுதியாக கூறினார். இதையடுத்து இவர் பிரபல நடிகையை காதலித்து வருவதாகவும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இவர்தான் மணப்பெண்ணா..!
1985ஆம் ஆண்டு முதல் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர், அருண் பாண்டியன். இவர், விஜய்காந்துடன் ‘தேவன்’ படத்தில் நடித்து பிரபலமானார். பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர் இவர். இவருக்கு கீர்த்தி பாண்டியன் என்ற மகள் உள்ளார். கீர்த்தி பாண்டியன், தர்ஷன் நடித்திருந்த ‘தும்பா’ படம் மூலம் பிரபலமானார். அதன் பிறகு ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நடித்திருந்தார். சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். அசோக் செல்வனுடன் ‘சவோலே சமாளி’ என்ற படத்தில் இவர் இணைந்து பணிபுரிந்தார். அதிலிருந்து இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளாக காதல் வளர்த்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அவர்களது நெருங்கிய வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர்.
திருமணம் எப்போது..?
அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியனின் காதலுக்கு இருவீட்டாரும் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதால் இவர்கள் இருவரும் விரைவில் இல்வாழ்க்கையில் இணைய உள்ளனர். செப்டம்பர் 13ஆம் தேதி பெண் வீட்டார் தரப்பில் எளிய முறையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னர், செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி:
அசோக் செல்வன் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் பெண்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் நாயகனாக இருந்து வந்தார். அனைத்து அழகான ஹீரோக்களையும் போல இவரும் தற்போது காதல் திருமணம் செய்து கொள்ள உள்ள தகவல் வெளியானதில் இருந்து இவரது ரசிகைகள் மிகுந்த சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் படிக்க | அதுக்குள்ள இத்தனை கோடியா..! ரிலீஸான 2 நாட்களில் மாபெரும் வசூலை அள்ளிய ஜெயிலர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ