கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் விடுமுறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும் பொங்கல் திருநாளை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷீம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தான் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி, தனது கண்டத்தை தெரிவித்துள்ளார்.