இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்!

ஆகஸ்ட்-11 மற்றும் ஆகஸ்ட்-12 ஆகிய தேதிகளில் பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகுகின்றன.  

Written by - RK Spark | Last Updated : Aug 11, 2022, 11:22 AM IST
  • இந்த வாரம் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன.
  • சாய் பல்லவி நடித்த கார்கி நாளை வெளியாகிறது.
  • லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியார் படம் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்! title=

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான 'தி வாரியர்' திரைப்படத்தில் ராம் போத்தினேனி, ஆதி, க்ரித்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா, நதியா, ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் நடித்துள்ளனர்.  ஜூலை-14ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் ஆகஸ்ட்-11ம் தேதி வெளியாகுகிறது.  'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தில் உதவி இயக்குநராக இருந்த சஜிமோன் இயக்கத்தில் ஃபஹத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான மலையாளப் படமான 'மலையன்குஞ்சு' ஓடிடியில் ஆகஸ்ட்-11ம் தேதி வெளியாகுகிறது.  கபில் வர்மா இயக்கத்தில் ஆதித்யராய் கபூர், சஞ்சனா ஆகியோர் நடிப்பில் உருவான ஹிந்தி மொழித்திரைப்படமான ராஷ்ட்ரகவோச்சம் படம் ஓடிடியில் ஆகஸ்ட்-11ம் தேதி வெளியாகுகிறது.  மேலும் இதே தினத்தில் பல்வேறு ஓடிடி தளங்களில் 'தேங்க்யூ தி மூவி' படம், 'விண்டோசீட்' படம் மற்றும் 'பியூட்டிஃபுல் பில்லோ' போன்ற படங்களும் வெளியாகுகின்றன.

மேலும் படிக்க | கேட்டதோ 'கைதி-2' அப்டேட்! கிடைத்ததோ தளபதி 67! உற்சாகத்தில் ரசிகர்கள்!

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படம் 'கார்கி'.  இந்த படத்தில் சாய் பல்லவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் இந்த படத்தில் காளி வெங்கட், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயபிரகாஷ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படம் ஆகஸ்ட்-12ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.  ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'சபாஷ் மிது' படம் ஆகஸ்ட்-12ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.  இப்படத்தில் டாப்ஸி முன்னனி ரோலில் நடித்துள்ளார்.  அறிமுக இயக்குநர் அனூப் எஸ் பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் தடயவியல் நிபுணராக நடித்துள்ள படம் 'கடாவர்'.  இந்தப்படம் ஆகஸ்ட்-12ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று பல்வேறு ஓடிடி தளங்களில் 'ஹரிக்காதேஅல்லாகிரிக்காதே' படம், 'ஹோலிவூண்ட்' படம், 'நாடிடோஷ்' படம், 'ஸ்ரீமதி' மற்றும் 'டே ஷிஃப்ட்' போன்ற படங்களும் வெளியாகவுள்ளன.

மேலும் படிக்க | பாடலாசிரியர் சினேகன் மீது போலீசில் புகார் செய்த தமிழ் நடிகை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ  

Trending News