இன்று OTT-யில் வெளியாகியுள்ள புதிய திரைப்படங்கள்!

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்கள் இன்று ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2022, 10:28 AM IST
இன்று OTT-யில் வெளியாகியுள்ள புதிய திரைப்படங்கள்!  title=

அகண்டா: போயபதி சீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த படம் ‘அகண்டா/. இதில் ப்ரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கடந்த டிச.2 அன்று திரையரங்குகளில் வெளியான ‘அகண்டா’ இன்று மாலை ஹாட்ஸ்டர் தளத்தில் வெளியாக உள்ளது.

akanda

ஷியாம் சிங்கா ராய்: தெலுங்கில் முன்னணி நடிகரான 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியான படம் “ஷியாம் சிங்கா ராய்”. இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் உருவான இப்படம் மறுபிறவியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் நானி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் சாய்பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர். இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

ShyamSinghaRoy

பேச்சுலர் (Bachelor): இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பேச்சுலர்”. திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார். கடந்த டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,  இன்று சோனிலிவ் தளத்தில் இன்று வெளியாகிறது.  

bachelor

முதல் நீ முடிவும் நீ: என்னை நோக்கி பாயும் தோட்டா, நிமிர், கிடாரி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த தர்புகா சிவா 'முதலும் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.  கிஷன் தாஸ், அம்ரிதா மாண்டரின், பூர்வா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் இன்று ஜீ 5  ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிவுள்ளது. 

MudhalneeMudivumnee

தீர்ப்புகள் விற்கப்படும்: இயக்குனர் தீரன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்துள்ள அதிரடி திரைப்படம் தீர்ப்புகள் விற்கப்படும். இத்திரைப்படத்தினை சஜீவ் மீராசாஹிப் ரவ்த்ர் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரசாத் இசையமைத்துள்ளார்.   நீண்ட  நாட்களுக்கு பிறகு சத்தியராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ள இப்படம் இன்று simply  south  தளத்தில் வெளியாகி உள்ளது.  

TheerpugalVirkkapadum

Unpaused: Naya Safar, Hey Jude, Loser, 36FarmHouse, Bhoothakaalam போன்ற படங்களும் இன்று OTT யில் வெளியாகி உள்ளது.

ALSO READ | வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ், வைரலாகும் போட்டோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News