இது என்ன அனுமனுக்கு வந்த சோதனை? ஆதிபுருஷை துவம்சம் செய்யும் நெட்டிசன்கள்!

Adipurush Vs Netizens: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் நடித்த ஆதிபுருஷ் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது மற்றும் சமூக ஊடகங்களில் எதிர்வினையை பெற்று வருகிறது. 

Written by - Bhuvaneshwari P S | Edited by - Shiva Murugesan | Last Updated : Jun 6, 2023, 06:35 PM IST
  • பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் நடித்த ஆதிபுருஷ் படம் வரும் ஜூன் 16-ம் தேதி வெளியாகிறது.
  • கடந்த ஆண்டே ட்ரைலர் வெளியாகி படுமோசமாக இருப்பதாக விமர்சனத்துக்கு உள்ளானது.
  • நெட்டிசன்களுக்கு படம் வெளியாகும் வரை செம கண்டெண்ட் கிடைத்துவிட்டது.
இது என்ன அனுமனுக்கு வந்த சோதனை? ஆதிபுருஷை துவம்சம் செய்யும் நெட்டிசன்கள்! title=

Adipurush Pre-Release Event: பிரபாஸ் ராமராக நடித்துள்ள ஆதிபுருஷ் படம் வரும் ஜூன் 16-ம் தேதி வெளியாகிறது. படத்தின் பிரமோஷன் வேலைகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் படக்குழுவின் சமீபத்திய அறிவிப்பு பேசு பொருளாகியுள்ளது.

ராமயண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ஆதிபுருஷ். இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்தப்படம் உருவாகியுள்ளது. 

கடந்த ஆண்டே ட்ரைலர் வெளியாகி கிராபிக்ஸ் பணிகள் மோசமாக இருப்பதாக விமர்சனத்துக்கு உள்ளானது. அதனால் மீண்டும் ரீ-வொர்க் பணிகள் நடைபெற்றது. சமீபத்தில் புதுப்பொலிவுடன் படத்தின் டிரைலர் வெளிடானது. இந்த முறை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் படிக்க - Prabhas: திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ‘ஆதிபுருஷ்’ நடிகர்..!

இந்தச்சூழலில் பிரமோஷனில் ஒரு பகுதியாக ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கில் ஒரு இருக்கை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப்போவதாக ஆதிபுருஷ் படக்குழு கூறியுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விஸ்வாசத்தின் உருமாக விளங்கும் அனுமனுக்கு மரியாதை அளிக்கும் வகையில் ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கையை அவருக்காக ஒதுக்குகிறோம் என தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதும், நெட்டிசன்களுக்கு புதிய கண்டெண்ட் கிடைத்துவிட்டது. அவர்கள் மீம் மழை பொழிந்து வருகின்றனர். அதில் ஒருவர், காதல் கொண்டேன் படத்தில் நாயகியிடம் பேசுவது போல தனுஷ் தனியாக பேசும் போட்டோவை வைத்துக்கொண்டு, அனுமானிடம் பேசுவது போலவும், அதற்கு அருகில் இருப்பவர் யாரிடம் பேசுகிறார் என்று கேட்க, அனுமாரிடம் என பதில் சொல்வது போலவும் மீம் போட்டுள்ளனர்.

Adipurush Movie

மற்றொரு நெட்டிசன், தமிழ்நாட்டுல மட்டும் அனுமனுக்கு 97% சீட் கொடுக்குறோம் என கலாய்த்துள்ளார்.

Adipurush Movie

அதோடு மற்றொருவர், நான் பார்ப்பதற்கு அனுமன் போல இருப்பதால் அந்த சீட்டை எனக்கே கொடுத்துடுவிடுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Adipurush Movie

எப்படியோ நெட்டிசன்களுக்கு படம் வெளியாகும் வரை செம கண்டெண்ட் கிடைத்துவிட்டது.

மேலும் படிக்க - Adipurush: அதிர வைக்கும் ஆதிபுருஷ் அப்டேட்..அடுத்த பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News