நான் சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க - விஜய் கோபம்!

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் படத்திற்காக விஜய் பேசிய இன்டர்வியூ நேற்று ஒளிபரப்பானது.  

Written by - RK Spark | Last Updated : Apr 11, 2022, 02:27 PM IST
  • பீஸ்ட் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாக உள்ளது.
  • விஜய் இதற்காக சிறப்பு நேர்காணல் கொடுத்து இருந்தார்.
  • இது தற்போது வைரலாகி வருகிறது.
நான் சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க - விஜய் கோபம்! title=

விஜய் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.  பீஸ்ட் படத்திற்கான பிரமோஷன் வேலைகள் படுஜோராக நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இன்டர்வியூ கொடுக்காமல் இருந்த விஜய் தற்போது இந்த படத்திற்காக கொடுத்துள்ளார். நெல்சன் கேள்வி கேட்க அதற்கு விஜய் பதில் சொல்லும் இன்டர்வியூ நேற்று சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டுக்கு வந்த அடுத்த சோதனை!- என்ன செய்யப்போகிறது படக்குழு?!

இந்த இன்டர்வியூ பற்றிய புரமோக்கள் வெளியானதில் இருந்தே அனைவருக்கும் ஆர்வம் அதிகமானது. பொதுவாக விஜய் படங்களை தாண்டி, ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிகளில் மட்டுமே பேசி வந்தார். இந்த முறை பீஸ்ட் படத்திற்கு ஆடியோ லான்ச் நடைபெறவில்லை என்பதால் ஸ்பெஷலாக இன்டர்வியூ எடுக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு முக்கியமான கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்திருந்தார். அதில் 10 ஆண்டுகளாக ஏன் எந்தவித இன்டர்வியூம் கொடுக்கவில்லை என்று கேட்கப்பட்டதற்கு, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நான் சொன்னது வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டு தவறாக எழுதப்பட்டது. இதனால் தான் நான் எங்கும் இன்டர்வியூ கொடுக்காமல் இருந்து வந்தேன் என்று விஜய் கூறியுள்ளார்.

மேலும் பல்வேறு கேள்விகளுக்கு, விஜய் அளித்திருந்த பதில் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.  தனது மகள் சஞ்சய் எப்பொழுது நடிக்க வருவார் என்பது தொடங்கி, நான் எப்போது அரசியலுக்கு வருவேன் என்பது வரை விஜய் பதிலளித்திருந்தார். ஆடியோ லான்ச்சில் சொல்வது போல, இதிலும் ஒரு குட்டி ஸ்டோரி கூறி இருந்தார். பீஸ்ட் படத்துடன் கேஜிஎப் படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பீஸ்ட் படத்திற்கு முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன.

மேலும் படிக்க | விஜய்யின் காரில் பீஸ்ட் குழுவினர் ஜாலி ரெய்ட்: இணையத்தில் வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News