அனுஷ்காவை ‘ஹாட் ஜிலேபி’ என்றழைத்த பிரபல காமெடி நடிகர்!

2015ஆம் ஆண்டு அனுஷ்காவை ஒரு பிரபல காமெடி நடிகர், ஹாட் ஜிலேபே என்று அழைத்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.   

Written by - Yuvashree | Last Updated : Sep 6, 2023, 06:33 PM IST
  • அனுஷ்காவை ஒரு நடிகர் ஹாட் ஜிலேபி என்று அழைத்துள்ளார்.
  • இது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
  • யார் அந்த நடிகர்? அவர் அனுஷ்காவை அப்படி அழைத்ததற்கு காரணம் என்ன..?
அனுஷ்காவை ‘ஹாட் ஜிலேபி’ என்றழைத்த பிரபல காமெடி நடிகர்!  title=

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக விளங்குபவர் அனுஷ்கா. இவர், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல ப்ளாக் பஸ்டர் ஹிட்ஸ்களை கொடுத்துள்ளார். இவர் குறித்து ஒரு பிரபல காமெடி நடிகர் ஒருவர் செய்த இரட்டை அர்த்த ஜோக், பேசு பொருளாக மாறியது. 

கடுப்பேற்றிய காமெடி நடிகரின் கமெண்ட்:

நடிகை அனுஷ்காவிற்கு தமிழில் இருப்பதை விட தெலுங்கு திரையுலகில் அதிகமாக பல ரசிகர்கள் உள்ளனர். காரணம், அவர் தெலுங்கில் பல ப்ளாக் பஸ்டர் படங்களில் கொடுத்துள்ளார். மேலும் காதல் அல்லது டேட்டிங் சர்ச்சைகளில் பெரிதாக இவர் சிக்கியதில்லை. ஆனால் ஒரு முறை, தெலுங்கு காமெடி நடிகர் அலி இவர் குறித்து கூறிய இரட்டை அர்த்த ஜோக், பலரையும் கடுப்பேற்றியது. 

Anushka
அனுஷ்கா, ‘சைஸ் ஜீரோ’ படத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடித்திருந்தார். இந்த படம் தமிழில் ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற பெயரில் வெளியானது. இதில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார். 2015ஆம் ஆண்டு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. அப்போது இதில் தெலுங்கு திரையுலகில் பிரபல காமெடி நடிகரான மொஹமத் அலி கலந்து கொண்டார். அப்போது, அனுஷ்காவை அவர் “அனைவரும் சாப்பிட விரும்பும் ஹாட் ஜிலேபி இவர். அனுஷ்காவிற்கு அழகான தொடை இருக்கிறது. பில்லா படம் பார்த்ததில் இருந்து நான் இவரது ரசிகராக மாறிவிட்டேன்” என்று குறிப்பிட்டார். இது ரசிகர்களுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. 

நடிகர் அலி அனுஷ்கா குறித்து மட்டுமல்லாது ஒரு முறை சமந்தாவின் இடை அழகு குறித்தும் பேசி பிரச்சனையில் மாட்டிக்கொண்டவர் இவர். 

மேலும் படிக்க | ஜவான் to தி நன்..இந்த வாரம் திரையரங்குகளில் வெளிவர இருக்கும் படங்களின் லிஸ்ட்!

மீண்டும் பெரிய திரையில் அனுஷ்கா..

நடிகை அனுஷ்கா, தனது திரையுலக வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் இருந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். 2015ஆம் ஆண்டில் இவர் நடித்திருந்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார். பின்னர் அவரால் அந்த உடல் எடையை குறைக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது. பின்பு பாகுபலி படத்தில் நடித்தார். 

ஆனாலும் இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதும் கிடைக்காமல் போனது. இதையடுத்து அவர் ‘நிசப்தம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதையடுத்து அவர் நடிக்கும் படம், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலி ஷெட்டி’. காமெடி-காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் அனுஷ்காவிற்கு ஜோடியாக மேடை கலைஞரான நவீன் பாலிஷெட்டி நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. 

அனுஷ்கா படத்துடன் இணைந்து வெளியிடப்பட இருக்கும் படங்கள்:

அனுஷ்காவின் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படத்துடன் சேர்ந்து ‘ஜவான்’ படம் வெளியாகிறது. அட்லி இயக்கியுள்ள இந்த படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளிவர இருக்கிறது. அனுஷ்காவின் படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவருகிறது. 

மேலும் படிக்க | தளபதி 68 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..! ரசிகர்கள் உற்சாகம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News