கமல் பிறந்த நாளில் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடு #DarbarMotionPoster

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகும் தர்பார் திரைப்பட மோஷன் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 6, 2019, 07:34 PM IST
கமல் பிறந்த நாளில் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடு #DarbarMotionPoster title=

புதுடெல்லி: நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் "தர்பார்". இத்திரைப்படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது. இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #DarbarMotionPoster என்ற ஹேஸ்டேக் டிரேண்டிங் செய்து வருகின்றனர். மேலும் படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒருசில வீடியோக்கள், புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரலாகியது. இதனையடுத்து படக்குழுவினர், தாமாகவே முன்வந்து படத்தின் புகைப்படங்களையும், டைட்டில் கார்டினையும் இணையத்தில் வெளியிட்டனர். 

 

மேலும் இந்த புகைப்படம் மற்றும் டைட்டில் கார்டினை கொண்டு அற்புதமான மோஷன் போஸ்டரினை ரசிகர்கள் தயாரிக்க வேண்டும் எனவும் படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப்படும் பர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.

 

இந்தநிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகி வருகின்றன. தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டரை தமிழ் மற்றும் தெலுங்கில் கமல்ஹாசனும், மலையாளத்தில் நடிகட் மோகன்லாலும், இந்தி சினிமாவில் நடிகர் சல்மான்கானும் வெளியிட உள்ளனர். அத்மட்டுமில்லாமல் நாளை கமல் ஹாசனின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending News