'பொன்னி நதி' பாடலால் கிளம்பிய புதிய சர்ச்சை! - நெட்டிசன்ஸ் குமுறல்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முதல் பாடலாக வெளியாகியுள்ள பொன்னி நதி பாடல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Aug 1, 2022, 04:04 PM IST
  • மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30 வெளியாகவுள்ளது.
  • இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
  • பொன்னி நதி எனும் முதல் சிங்கிள் சர்ச்சையாகி உள்ளது.
'பொன்னி நதி' பாடலால் கிளம்பிய புதிய சர்ச்சை! - நெட்டிசன்ஸ் குமுறல்! title=

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள்  நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இரு பாகங்களாக உருவாகிவரும் இப்படத்தின் முதல் பாகம்தான் தற்போது வெளியாகவுள்ளது. இப்படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்கள் அண்மையில் வெளியாகின. அதைத் தொடர்ந்து சர்ச்சைகளும் வெடித்தன.

குறிப்பாக ஆதித்த மற்றும் அருள் மொழி போன்ற கதாபாத்திரங்களின் ஒரிஜினல் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாகச் சிலர் விமர்சனம் செய்தனர்.  அதற்குப் பதிலளித்த மற்றொரு தரப்பு தமிழ் எழுத்து ஓசை மரபுப்படி போஸ்டர்களில் அவை சரியாகவே அமைந்துள்ளதாக விளக்கம் அளித்தனர். அதே போல ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சியும் சர்ச்சையாக வெடித்தது. 

 

சோழர்களின் வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லை எனவும் இக்காட்சி அமைப்பு தவறானது எனவும் வரலாற்றை மணிரத்னம் மறைத்துள்ளதாகவும் சிலர் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.

இந்த நிலையில் இப்படம் தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று தற்போது கிளம்பியது. பொன்னியின் செல்வன் படத்திலிருந்து முதல் சிங்கிளாக பொன்னி நதி எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுதான் புதிய சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது. 

அதாவது, பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல் லிரிக்கல் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த லிரிக்கல் வீடியோவில் தமிழ் வார்த்தைகள் ஏதும் இல்லாமல் தங்க்லீஸில் எழுதப்பட்டுள்ளது சர்ச்சை ஆகியுள்ளது.

தமிழில் வெகுஜனக் கவனம் பெற்ற நாவல்களுள் ஒன்றான பொன்னியின் செல்வனை வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் பாடலில் தமிழுக்கு இடமில்லையா என பலர் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். 

மேலும் படிக்க | சமந்தா- நயன்தாரா சர்ச்சை ! முடித்துவைத்த கரன் ஜோஹர்! - என்ன சொன்னார் தெரியுமா?

 

அதேபோல, புழக்கத்தில் இல்லாத பண்டைய தமிழ் வார்த்தைகள், சங்க கால தமிழ் வார்த்தைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளதாகச் சொல்லப்படும் நிலையில், அப்படத்தின் லிரிக்கல் வீடியோவில் தமிழ் இடம்பெறாதது ஏன் எனவும் நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சைக்குரிய கதையில் கை வைத்த ‘ஜெய்பீம்’ இயக்குநர்!- எந்த வழக்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News