மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல இயக்குநர்!

பிரபல இயக்குநர் ஒருவர், இளம் பெண்ணை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 22, 2023, 03:03 PM IST
  • மலையாள இயக்குநர் ஜாசிக் அலி, பைனரி எனும் படத்தை இயக்கியுள்ளார்.
  • நடிக்க வைப்பதாக கூறி மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
  • இந்த சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல இயக்குநர்! title=

பொறுப்பு துறப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியில் “பாலியல், வன்கொடுமை” போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது சிலருக்கு மன உளைச்சலை உண்டாக்கலாம். இந்த வார்த்தைகளை யாரையும் துன்புறுத்தும் நோக்கிலோ, மன கசப்பை உண்டாக்கும் நோக்கிலோ நிர்வாகம் பயன்படுத்தவில்லை. 

மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குநர் ஜாசிக் அலி, இளம் பெண்ணை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

மலையாள இயக்குநர்: 

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஜாசிக் அலி. இவருக்கு 36 வயது ஆகிறது. இவர், பைனரி எனும் மலையாள படத்தை இயக்கி புகழ் பெற்றவர். இந்த படம் இந்த ஆண்டின் மே மாதத்தில் வெளியானது. இதில், ஜாய் மேத்யூ, நிர்மல் பலழி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தனர். 

Malyalam

பாலியல் வன்கொடுமை:

ஜாசிக் அலி, பைனரி படத்தில் நடிக்க வைப்பதாக கூறி ஒரு மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஜாசிக் அலி மீது கொடுத்திருந்த புகாரில் அவர் மைனர் சிறுமியை கடத்தியதாகவும் பின்னர் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக, போலீஸார் இவரை பல நாட்கள் தேடி வந்துள்ளனர், சமீபத்தில் நடக்காவு பகுதியில் தங்களின் தேடுதல் வேட்டையை போலீஸார் துரிதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து போலீஸாரின் கையில் வசமாக சிக்கிய ஜாசிக் அலி, POCSO வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

முதலில் அம்மாவை...

தற்போது POCSO வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாசிக் அலி, முன்னதாக அந்த பெண்ணின் அம்மாவையும் பலாத்காரம் செய்துள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. தனது படத்தில் நடிக்க வைப்பதாக கூறி, ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று அந்த பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம்ச் செய்துள்ளார். இது குறித்த வழக்கில் அவர் தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணின் மகளையும் ஜாசிக் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | ‘ஜெய்பீம்’ வழக்கு: சூர்யா மற்றும் ஞானவேல் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News