விலையுயர்ந்த காரை வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்! விலை இத்தனை கோடியா?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சுமார் ரூ.1.19 கோடி மதிப்பிலான ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 17, 2022, 04:56 PM IST
  • புதிய சொகுசு காரை வாங்கினார் மகேஷ் பாபு.
  • புதிய காருடன் இன்ஸ்டாவில் பதிவு.
  • ஆடி காரின் விலை 1.19 கோடி என்று கூறப்படுகிறது.
விலையுயர்ந்த காரை வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்! விலை இத்தனை கோடியா? title=

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் மகேஷ் பாபு.  இவர் 'சர்க்காரு வாரி பாட' படத்தின் வெளியீட்டிற்கு தயராகி வருபவர், தற்போது விலையுயர்ந்த சுமார் ரூ.1.19 கோடி மதிப்பிலான ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார்.  இந்த வகை கார்கள் இந்தியாவில் ரூ.1.01 கோடி என்பதிலிருந்து  தொடங்கி ரூ.1.19 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது.  இதன்மூலம் ஆடி எஸ்யூவி கார்களை வைத்திருக்கும் நட்சத்திரங்களின் பட்டியலில் தற்போது நடிகர் மகேஷ் பாபுவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  தான் கார் வாங்கியுள்ள இந்த செய்தியை நடிகர் சமூக வலைதளம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mahesh Babu (@urstrulymahesh)

மேலும் படிக்க | கேஜிஎப் படத்தின் இசையமைப்பாளர் ஒரு இருப்பு தொழிலாளியா?

அந்த காரின் பக்கத்தில் நிற்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மகேஷ் பாபு, சுத்தமான, பசுமையான எதிர்காலத்தை கொண்டு வரும் நோக்கில், இந்த ஆடி காரின் அனுபவத்தை ஏற்க மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார், இது இவர் சுற்றுசூழலின் நலனில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறார் என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.  மகேஷ் பாபு வாங்கியுள்ள இந்த கார் பிளாட்டினம் கிரே ஃபினிஷ் கொண்ட சிங்கிள் பிரேம் கிரில் மற்றும் 20-இன்ச் கிராஃபைட் கிரே டைமண்ட்-கட் அலாய் வீல்களை கொண்டுள்ளது.  இதனை சுற்றி பொருத்தப்பட்டுள்ள எல்இடி ஸ்ட்ரிப்ஸ் காருக்கு சிறந்த பளபளப்பு தன்மையை கொடுக்கிறது.

இந்த இ-ட்ரான் 5,014 மிமீ நீளம், 1,686 மிமீ உயரம் மற்றும் 1,976 மிமீ அகலம் கொண்டது. அடிப்படை வேரியண்டில் 660 லிட்டர் பூட் ஸ்பேஸை 1,725 ​​லிட்டர் வரை நீட்டிக்க முடியும், அதே சமயம் டாப் வேரியண்ட் 615 லிட்டர் பூட் ஸ்பேஸை 1,665 லிட்டர் வரை நீட்டிக்க முடியும்.  இந்த எலக்ட்ரிக் காரின் உள்ளே, 12 இன்ச் டிஜிட்டல் ஆடி விர்ச்சுவல் காக்பிட்,  3டி சரவுண்ட் கொண்ட 16-ஸ்பீக்கர் ஓலுஃப்சென் ஆடியோ சிஸ்டம், ஆம்பியண்ட் விளக்குகள், ஃபோர் சோன் கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, பனோரமிக் கண்ணாடி சன்ரூஃப் போன்றவற்றை கொண்டுள்ளது.  மேலும் இதில் பாதுக்கப்புக்காக 8 ஏர் பேக்குகள், மின்னும் சீட் பெல்ட்டுகள், பார்க்கிங் சென்சார்கள், ப்ரீடென்ஷனர்கள் மற்றும் லோட் லிமிட்டர்கள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.  மேலும் இந்த ஆடி இ-டிரான் 50 ஆனது 71kWh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது அதிகபட்சமாக 308 hp மற்றும் 540 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது.  இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி 0-100 கிமீ வேகத்தை 6.8 வினாடிகளில் கடந்து 190 கிமீ வேகத்தில் செல்லும் என்று இந்நிறுவனம் கூறுகிறது.

audi

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தை தான் போட வேண்டும் என திரையரங்கிற்கு மிரட்டலா? உண்மை என்ன!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News