மீண்டும் மாறியது மாமனிதன் ரிலீஸ் தேதி

மாமனிதன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 13, 2022, 03:50 PM IST
  • மாமனிதன் திரைப்பட ரிலீஸ் தேதி மாற்றம்
  • ஜூன் 24ஆம் தேதி வெளியாகிறது மாமனிதன் படம்
மீண்டும் மாறியது மாமனிதன் ரிலீஸ் தேதி title=

விஜய் சேதுபதியை ஹீரோவாக தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனு ராமசாமி. இதனையடுத்து அவர் விஜய் சேதுபதியை வைத்து தர்மதுரை,இடம் பொரு ஏவல் ஆகிய படங்களை இயக்கினார்.

இதில் தர்மதுரை படம் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் இடம் பொருள் ஏவல் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்தச் சூழலில் விஜய் சேதுபதியை வைத்து சீனுராமசாமி மாமனிதன் என்ற படத்தையும் இயக்கினார்.

Maamanithan

காயத்ரி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.

இதில் முதல்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். 2019ஆம் ஆண்டே படத்தின் முழு பணிகள் முடிந்தாலும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது.

மேலும் படிக்க | மாஸ் காட்டும் கமல்ஹாசன்..! விஜய்யின் ‘வசூல்’ இடம் பறிபோகிறதா? ஓர் அலசல்! 

இப்படிப்பட்ட நேரத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் மாமனிதன் படத்துக்கான வெளியீட்டு உரிமையை கைப்பற்றினார்.

 

வெளியீட்டு உரிமையை சுரேஷ் கைப்பற்றியதும் ரிலீஸ் வேகம் சூடுபிடித்தது. அதன்படி மே மாதம் 6ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டு பின்னர் மே 20ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் சில காரணங்களால் மே 20ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 23ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | தொடர்ந்து லீக்காகும் புகைப்படங்கள்... இந்த முறை ராஷ்மிகா - விஜய்... அதிர்ச்சியில் படக்குழு

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாறியுள்ளது. படமானது ஜூன் 24ஆம் தேதி வெளியாகுமென தற்போது கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News