நெல்சனுடன் மீண்டும் கைக்கோர்க்கும் விஜய்-சுட சுட அப்டேட்ட சொன்ன சினிமா பிரபலம்!

Vijay-Nelso Dilipkumar: நெல்சன் திலீப்குமார்-விஜய் கூட்டணியில் இன்னொரு படம் உருவாக உள்ளதாக பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார்.  

Written by - Yuvashree | Last Updated : Oct 28, 2023, 06:39 AM IST
  • விஜய்-நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவான படம், பீஸ்ட்.
  • இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக ஒரு சினிமா பிரபலம் கூறியுள்ளார்.
  • அவர் கொத்த சுட சுட அப்டேட் என்ன?
நெல்சனுடன் மீண்டும் கைக்கோர்க்கும் விஜய்-சுட சுட அப்டேட்ட சொன்ன சினிமா பிரபலம்! title=

‘லியோ’ பட நாயகன் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக ஒரு சினிமா பிரபலம் கூறியிருக்கிறார். 

நெல்சன்-விஜய் கூட்டணியில் பீஸ்ட்:

‘கோலமாவு கோகிலா’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமானவர், நெல்சன் திலீப்குமார். இவர் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய ‘டாக்டர்’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று மிகப்பெரிய வெற்றி கண்டது. இதையடுத்து, நெல்சனிற்கு கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக விஜய்யை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படி உருவான படம்தான் ‘பீஸ்ட்’. 

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் RAW ஏஜண்ட் ஆக நடித்திருந்தார். இதுவரை தமிழ் சினிமாவின் ஹீராேக்களுக்குரிய சில அம்சங்களை தன் படத்திலும் புகுத்தி வந்த விஜய், பீஸ்ட் படம் மூலம் வித்தியாசம் காட்டினார். இதில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். விடிவி கணேஷ், செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக வந்தனர். 

மேலும் படிக்க | Leo Box Office Collection Day 8: முதல் வார வசூலில் சாதனை.. மாஸ் காட்டும் விஜய்யின் லியோ

விமர்சனங்களில் செம அடி..

நடிகர் விஜய்யின் படங்கள், பொதுவாகவே விமர்சன ரீதியாக அடி வாங்குவது வழக்கம். பீஸ்ட் படமும் அப்படிப்பட்ட விமர்சனங்களில் இருந்து தப்பிக்கவில்லை. படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியான சமயங்களில் ரசிகர்களுக்கு படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு கூடியது. காரணம், நெல்சன்-விஜய் கூட்டணிதான். ஆனால், படத்தில் நியாயமற்ற சில காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் இந்தியாவை தாண்டி, பாகிஸ்தானில் இருந்தெல்லாம் மீம்ஸ் பறந்தது. ஆனாலும், இப்படத்தை குடும்ப ரசிகர்கள் விரும்பி பார்த்தனர். விமர்சன ரீதியாக அடி வாங்கியிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் பீஸ்ட் படம் பல கோடிகளை தாண்டியது. இதனால், நடிகர் விஜய் பீஸ்ட் படக்குழுவினரை அழைத்து அவர்களுக்கு தனது வீட்டில் விருந்து வைத்தார். 

Manoj Paramahamsa

அப்டேட் கொடுத்த பிரபலம்..!

பீஸ்ட் படத்தில் பாராட்டப்பட்ட சில அம்சங்களில் ஒன்று, படத்தின் ஒளிப்பதிவு. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்தவர், மனோஜ் பரமஹம்சா. இவர்தான் லியாே படத்திலும் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் ஒரு பிரபல ஊடகத்தின் நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போதுதான் அவர் நெல்சன்-விஜய் கூட்டணி குறித்த ஒரு சிறப்பு தகவலை பகிர்ந்து கொண்டார். 

மீண்டும் கூட்டணி..? 

பீஸ்ட் பட ரிலீஸிற்கு பிறகு விஜய் படக்குழுவினரை வைத்து விருந்து வைத்தற்கான காரணத்தை மனோஜ், பகிர்ந்துள்ளார். அந்த நிகழ்வின் போது, நெல்சன்-விஜய் மீண்டும் ஒரு படத்தில் இணைவது குறித்து பேசியதாகவும் அவர் கூறியிருக்கிறார். பீஸ்ட் படத்திற்கு பிறகு ஜெயிலர் படம் மூலம் கம்-பேக் கொடுத்த நெல்சன் விஜய்யை வைத்து ஒரு நல்ல படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வாய்ப்பு உள்ளதா? 

நடிகர் விஜய், சில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. இன்னும் 2 படங்களில் நடித்து முடித்த பிறகு அவர் இது குறித்த ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது ‘தளபதி 68’ படத்தில் பிசியாக இருக்கும அவர், அடுத்து ஷங்கருடன் ஒரு படத்தில் கைக்கோர்க்க உள்ளதாகவும், அதுவே அவரது கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. எனவே, இவரும் நெல்சனும் இன்னொரு படத்தில் இணைய வாய்ப்புகள் குறைவு என்றும் சினிமா ரசிகர்கள் கணித்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | அஜித்திற்கு வில்லனாகும் எஸ்ஜே சூர்யா! அதுவும் இந்த படத்தில்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News