'கோட்' படத்தில் விஜயுடன் ஒலிக்கும் பவதாரிணி குரல்.. விஜய் பிறந்தநாளில் ட்ரீட்

Chinna Chinna Kangal The Goat Second Single: நாளை அதாவது ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 50வது வயதை எட்டவுள்ளார். இதனால் இவரது பிறந்த நாள் கொண்ட்டாட்டத்தின் ஒரு பகுதியாக தி கோட் படத்தின் முக்கிய அப்டேட் ப்ரோமோ வீடியோவாக தற்போது வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 21, 2024, 07:01 PM IST
  • தி கோட் படத்தின் ப்ரோமோ வீடியோவாக தற்போது வெளியாகியுள்ளது.
  • நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்.
'கோட்'  படத்தில் விஜயுடன் ஒலிக்கும் பவதாரிணி குரல்.. விஜய் பிறந்தநாளில் ட்ரீட் title=

Chinna Chinna Kangal The Goat Second Single Promo Video : நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த The Greatest Of All Time படத்தின் இரண்டாவது பாடல் சின்ன சின்ன கண்கள் (Chinna Chinna Kangal) நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதன் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்திற்கு GOAT - The Greatest Of All The Time (GOAT) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்துள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் பிகில் படத்திற்கு பிறகு இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளதுக்கிறது. கடந்த ஆண்டு தொடங்கிய The GOAT படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்னாப்ரிக்கா, ஹைதராபாத், புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இதனிடையே தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதுடன் இந்த படத்தில் நடிகை த்ரிஷா, விஜயகாந்த், சிவகார்த்திகேயன் மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் கோமியோ ரோலில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக மறந்த நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த படத்தில் காட்சி அளிக்கயுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Aranmanai 4 : பேய் படமா? காமெடி படமா? அரண்மனை 4 எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

தொடர்ந்து சிறு சிறு அப்டேட்டுக்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது படம் தொடர்பாக மிகப்பெரிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த The Greatest Of All Time படத்தின் இரண்டாவது பாடல் சின்ன சின்ன கண்கள் (Chinna Chinna Kangal) நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். அவருடன் இந்த படத்தில் மறைந்த மறைந்த பாடகர் பவதாரிணி இணைந்து பாடியுள்ளனர். கபிலன் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தப் பாடலின் புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வீடியோவில் பவதாரிணியின் குரலில் மனதை வருடும் மெலடி பாடலாக இப்பாடல் உருவாகியிருப்பதை உணர முடிகிறது. முன்னதாக, வெளியான முதல் சிங்கிளான ‘விசில் போடு’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | OTT Releases : அரண்மனை 4 to ரசவாதி..ஓடிடியில் வெளியாகும் புத்தம் புதிய படங்கள்! எதை, எதில் பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News