Origin of Kadavule Ajithey : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித், நேற்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தன்னை இனி யாரும் “கடவுளே அஜித்தே..” என அழைக்க கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த கடவுளே அஜித்தே உருவானது எப்படி தெரியுமா?
எல்லை மீறிய ரசிகர்கள்!
பொதுவாக, நம் தமிழ் திரையுலக நடிகர்கள் அனைவருக்குமே, அவர்களின் பெயரைதாண்டி, அடைமொழி பெயரும் இருக்கிறது. விஜய்க்கு தளபதி, ரஜினிக்கு சூப்பர் ஸ்டார், விஷாலுக்கு புரட்சி தளபதி, விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என பல்வேறு பெயர்கள் உள்ளன. அப்படி, பல ஆண்டு காலங்களாக அஜித்தை ‘தல’ என செல்லமாக அழைத்து வந்தனர் ரசிகர்கள். இதற்கு முட்டுக்கட்டை போட்டு அறிக்கை விடுத்தார் நடிகர் அஜித்.
2021ஆம் ஆண்டு ஒரு அறிக்கையை வெளியிட்ட அவர், தன்னை யாரும் இனி ‘தல’ என அழைக்க கூடாது என்று கூறினார். இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பிருந்து, அவரது ரசிகர்கள் எங்கு சென்றாலும் ‘கடவுளே அஜித்தே’ என கோஷமிட ஆரம்பித்தனர். இதனால் கடுப்பான அஜித், அந்த கோஷத்திற்கும் ஆப்பு வைத்திருக்கிறார்.
அஜித்தின் பரபரப்பான அறிக்கை!
அஜித், தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தார்:
சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க..... அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.
என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!
என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | ‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?
காரணமான வீடியோ!
எப்போதோ யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்ட ஒரு வீடியாேதான், இந்த ‘கடவுளே அஜித்தே’ ஆரம்பிப்பதற்கு காரணமாகியிருக்கிறது.
இந்த வீடியோவில், ஒரு பரோட்டா கடையில் ஒருவர் ராகத்துடன் பரோட்டா போட, அதற்கு அந்த கடையில் அமர்ந்திருப்பவர்கள், “அஜித்தே” என கத்துகின்றனர்.
இதையடுத்து, சமீபத்தில் இன்ஸ்டாகிராம்-பேஸ்புக் என அனைத்து தளங்களிலும் ஒரு வீடியோ வைரலானது. அதில், படம் பார்த்த ஒரு ரசிகர் தனது கருத்தை கூறிக்கொண்டிருப்பார். அதற்குள் மைக்கை பிடிக்கும் ஒரு போதை ஆசாமி, ‘கடவுளே அஜித்தே..அஜித்தே கடவுளே..” எனக்கூறுவார். பின்னர், “நான் தல ரசிகரு..படையே வந்தாலும் தடையே இல்லாம போய்க்கிட்டே இருப்போம் ஜாக்கிரதை..” என்று கூறிவிட்டு செல்வார்.
இப்படி, அஜித்தை அவரது ரசிகர்கள் கடுப்பேற்ற காரணமாக இருந்த அந்த ‘கடவுளே அஜித்தே’ என்ற வார்த்தைகள், இந்த இரண்டு வீடியோக்கள் மூலமாகத்தான் பரவ ஆரம்பித்தன.
இது ஒரு புறமிருக்க, அனிருத் விடாமுயற்சி படத்தில் “கடவுளே அஜித்தே” கோஷத்தயே இசையமைத்து வைத்திருக்கிறார். அவருக்கு அஜித் என்ன அறிக்கை விடப்போகிறாரோ, தெரியவில்லை.
மேலும் படிக்க | 'கடவுளே அஜித்தே' பொங்கி எழுந்த அஜித்... திடீர் அறிவிப்பு - என்ன சொன்னார் பாருங்க?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ