2024ன் டாப் இசையமைப்பாளர் யார்? ஏ.ஆர்.ரஹ்மான்-அனிருத் இல்லை! ‘இவர்’ தான்!

Most Streaming Music Director In Spotify 2024 : இந்த ஆண்டில் அதிக படங்களுக்கு இசையமைத்து, spotify தளத்தில் யார் அதிகமாக stream செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Dec 6, 2024, 03:17 PM IST
  • 2024ல் அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட இசையமைப்பாளர்!
  • ஏ.ஆர்.ரஹ்மான் இல்லை, அனிருத் இல்லை..
  • வேறு யார் தெரியுமா?
2024ன் டாப் இசையமைப்பாளர் யார்? ஏ.ஆர்.ரஹ்மான்-அனிருத் இல்லை! ‘இவர்’ தான்! title=

Most Streaming Music Director In Spotify 2024 : 2024 ஆம் ஆண்டு தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏற்றத்தையும் இரக்கத்தையும் கொடுத்த ஆண்டாக இருந்தது. தமிழ் திரையுலக பொருத்தவரை டாப் இசையமைப்பாளர்களாக இருப்பது, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனிருத். ஏனென்றால் இவர்கள் இருவருமே இப்போது தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகின்றனர். ஆனால் இவர்கள் செய்யாத ஒரு விஷயத்தை வேறு ஒரு இசையமைப்பாளர் செய்து, இந்த வருடத்தின் டாப் இசையமைப்பாளராக இருக்கிறார். 

2024ன் டாப் இசையமைப்பாளர்: 

2024-ன் முதல் பாதியில், பல படங்கள் வெளியாகின. ஆனால் அந்த படங்கள் அனைத்துமே, வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களாகவும், சிறிய பட்ஜெட் படங்களாகவும் இருந்தன. இதில், ஒரு இசையமைப்பாளர் பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இந்தியர்கள் பலர் உபயோகிக்கும் இசை கேட்கும் செயலி, Spotify. இந்த தளம் சமீபத்தில் இந்த ஆண்டின் Wrap-ஐ வெளியிட்டிருந்தது. இதில், இந்த ஆண்டில் அந்த தளத்தில் அதிகம் ஸ்டீரீமிங் செய்யப்பட்டிருக்கும் இசையமைப்பாளர் யார் என்ற விவரத்தை வெளியிட்டிருந்தது. 

Spotify

அந்த இசையமைப்பாளர் வேறு யாருமில்லை, ஜி.வி.பிரகாஷ்தான். இந்த வருடத்தில் வெளியான பல படங்களுக்கு இவர் இசைமைத்திருந்தார். இந்த வருடத்தில் மட்டும் இவர் 4 ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். அதிலும் அமரன் மற்றும் தங்கலான் படத்தின் பாடல்கள் பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. இன்னும் வெளியாகாமல் இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் உள்ள ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடலும் ஹிட் அடித்தது. இந்த பாடல், யூடியூபில் மட்டும் 96 மில்லியன் வியூஸ்களை பெற்றிருக்கிறது. ஸ்பாடிஃபை தளத்தில் இவரது 372 பாடல்கள் மட்டும் மாெத்தம் ஸ்ட்ரீம் செய்யப்பட்டிருக்கின்றன. 

ஜி.வி.பிரகாஷ் படங்கள்:

டியர் படத்தில் தொடங்கி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், தங்கலான், அமரன், லக்கி பாச்கர், மட்கா, சர்ஃபிரா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இது மட்டுமன்றி இன்னும் இவர் இசையில் வெளிவர பல படங்கள் ரிலீஸிற்காக காத்துக்கொண்டுள்ளன. 

அடுத்த வருடமும் டாப்தான்!

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் பல படங்கள், அடுத்த வருடம் வெளியாக இருக்கின்றன. இதனால், 2025-ம் இவரே டாப் இசையமைப்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | 2024-ல் பெரிதும் ஏமாற்றமளித்த 2 தமிழ் படங்கள்! ஒன்னு கங்குவா..இன்னொன்னு எது?

ஏ.ஆர்.ரஹ்மான்-அனிருத்தின் படங்கள்!

ஏ.அர்.ரஹ்மான் இசையில் இந்த வருடம் மொத்தம் 6 படங்கள் வெளியாகின. தமிழில் அயலான், லால் சலாம், ராயன் ஆகிய படங்கள் வெளியாக, மலையாளத்தில் ஆடு ஜீவிதம் படமும், இந்தியில் மைதான் மற்றும் அமர் சிங் சம்கிலா படங்களும் வெளியாகின. இதில், ஒரு சில பாடல்கள் மட்டுமே மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தன. 

அதே போல அனிருத் இந்த வருடத்தில் மொத்த 3 பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். இதில், இந்தியன் 2 படம், பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால், அப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் ஹிட் அடித்தன. தெலுங்கில் இவர் இசையமைத்த தேவாரா:பாகம் 1 படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதே போல, வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் ட்ரெண்ட் ஆனது. இருப்பினும் இவரது பாடல்கள், இந்த வருடத்தில் ஸ்பாடிஃபை தளத்தில் குறைவாகவே ஸ்ட்ரீம் செய்யப்பட்டிருக்கின்றன. 

மேலும் படிக்க | 2024-ல் வெளியான டாப் 5 தமிழ் திரைப்படங்கள்! முதல் இடத்தில் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News