லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்? மருத்துவர்கள் விளக்கம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்னும் ஒருவாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 01:42 PM IST
  • லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு
  • மும்பை மருத்துவமனையில் அனுமதி
  • தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை
லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்? மருத்துவர்கள் விளக்கம் title=

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர், கடந்த வாரம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, கொரோனா பரிசோதனையின்போது நிமோனியாவும் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஐ.சி.யூவில் இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ALSO READ | 'சாணிக்காயிதம்' படத்தின் OTT உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பரவி வரும் நிலையில், ப்ரீச் கேண்டி மருத்துவர்கள் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர் திடமாக இருப்பதாகவும், இன்னும் ஒரு வாரம் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளனர்.

ALSO READ | பிறந்த நாளில் ரசிகர்களுடன் உரையாட வருகிறார் ஸ்ருதி ஹாசன்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், அவரை வெளியே அனுப்ப விரும்பவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாக்டர். பிரதீத் சம்தானி உள்ளிட்ட 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். லதா மங்கேஷ்கருக்கு இப்போது 92 வயதாகிறது. பிரபு குஞ்ச் பகுதியில் வசிக்கும் அவரது வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவாக உடல்நலம் பெற வேண்டி இந்தியாவின் பிரபலமான இசையமைப்பாளர்கள் மற்றும் பின்னணி பாடகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். லதா மங்கேஷ்கரின் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், லதா மங்கேஷ்கர் உடல்நிலை குறித்து பரவும் தகவலில் உண்மையில்லை என விளக்கமளித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News