Chiyaan 60: முடிந்தது சியான் 60: ஆரம்பமானது கோப்ராவின் அதிரடி மாஸ்

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் #சியான்60 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.  அதையடுத்து விக்ரம் நடிப்பில் ஏற்கனவே தொடங்கப்பட்ட கோப்ரா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது....   

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 15, 2021, 06:22 PM IST
  • முடிந்தது சியான் 60 படபிடிப்பு
  • ஆரம்பமானது கோப்ராவின் அதிரடி மாஸ்
  • மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கும் படம் கோப்ரா
Chiyaan 60: முடிந்தது சியான் 60: ஆரம்பமானது கோப்ராவின் அதிரடி மாஸ் title=

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் #சியான்60 படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது.  இன்று விக்ரம் நடிப்பில் ஏற்கனவே தொடங்கப்பட்ட கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. 

மாஸ்டர் திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த லலித் குமார்  அதே நேரத்தில் விக்ரமை வைத்து கோப்ரா என்ற படத்தையும் தயாரித்தார்.  இளம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்குகிறார்.  விக்ரமின் விதவிதமான கெட்டப்புகளில் உருவாகும் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  

கொரோனா தோற்று காரணமாக வெளிநாடுகளில் எடுக்கவேண்டிய கோப்ரா திரைப்படத்தின் மீதமுள்ள பகுதிகள் எடுக்க முடியாமலேயே தள்ளிப்போனது.  இதன் காரணமாக குறுகிய காலத்தில் விக்ரமை வைத்து மற்றொரு படத்தையும் தயாரித்தார் லலித்குமார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும்  இப்படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கின்றனர்.  இப்படத்தில் விக்ரம் ஒரு கேங்ஸ்டராகவும், துரு விக்ரம் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

விக்ரம்

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அப்படக்குழு அறிவித்துது.  தற்போது கோப்ரா படத்தில் மீதமுள்ள காட்சிகள் இன்று முதல் படமாக்கப்படுகின்றன.  தற்போது இதன் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.  

விக்ரமை வைத்து தொடர்ந்து இரண்டு படங்களை தயாரித்து வரும் லலித்குமார் விஜய் சேதுபதியை வைத்து காத்துவாக்குல 2 காதல் மற்றும் துக்ளக் தர்பார் என்ற படத்தையும் தயாரிக்கிறார். துக்ளக் தர்பார் படத்தின் சூட்டிங் முடிந்து தற்போது ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் வந்துள்ளது. 

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | திரைத்துறையைச் சார்ந்த 12000 குடும்பங்களுக்கு உதவிய நவரசா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News