2023ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள் இது தான்!

Top 5 Movies in Kollywood: 2023ம் ஆண்டு பல தமிழ் படங்கள் உலகளவில் ஹிட் அடித்துள்ளது.  இரண்டு படங்கள் 600 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 30, 2023, 10:36 AM IST
  • லியோ படம் அதிக வசூல் செய்துள்ளது.
  • இந்த ஆண்டு முதல் இடத்தில் உள்ளது.
  • லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
2023ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள் இது தான்! title=

2023 ஆம் ஆண்டில் கோலிவுட்டில் பல வெற்றி படங்கள் குவிந்தன.  பல புது முக இயக்குனர்கள் இந்த ஆண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளனர்.  இதனால் பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது.  இருப்பினும் பெரிய ஹீரோக்களின் படங்களே அதிக வசூலை பெற்றுள்ளன.  தளபதி விஜய்யின் லியோ, ரஜினிகாந்தின் ஜெயிலர், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றது.  இந்த படங்களால் கோலிவுட்டில் வசூல் மழை பொழிந்தது.  மேலும் தென்னிந்திய திரையுலகில் ஆதிக்கத்தை செலுத்தியது.  2023-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களை பற்றி பார்ப்போம். 

மேலும் படிக்க | கடைசிவரை கேப்டனை வந்து பார்க்காத வடிவேலு! இருவருக்கும் என்னதான் பிரச்சனை?

லியோ - 650 கோடி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தளபதி விஜய் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக வெளியான லியோ மாபெரும் வெற்றி படமாக பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்து ஆதிக்கம் செலுத்தியது. 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான லியோ படம் 650 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.  2023ல் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக மாறியது லியோ.  இந்த படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜெயிலர் - 600 கோடி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஜெய்லர். இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப்படமாக பாக்ஸ் ஆபிஸ் முக்கிய இடத்தைப் பிடித்தது. உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய இப்படம், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்தியது. 2023ல் அதிக வசூல் செய்த படங்களில் 'ஜெயிலர்' இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.  கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் ஜாக்கி ஷெராஃப், ஷிவா ராஜ்குமார், மிர்னா மேனன், மோகன்லால், வசந்த் ரவி, விநாயகன், தமன்னா பாட்டியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன்: II - 350 கோடி

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகம் வெளியானது.  விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா மற்றும் ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.  கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து 2023 ஆம் ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக மாறி உள்ளது.

வாரிசு - 310 கோடி

வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான வாரிசு படம் 2023 பொங்கல் பண்டிகைக்கு வெளியானது.  குடும்ப பின்னணி கொண்ட படமாக வெளியான வாரிசு, பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.  காதல், நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் ஆகியவற்றின் கலவையுடன் கூடிய இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 310 கோடி ரூபாய் வசூலித்தது.  

துணிவு - 250 கோடி

எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான படம் துணிவு.  வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவான இந்த படத்தில் அஜித் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜி.எம்.சுந்தர், அஜய், வீரன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். துணிவு படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 250 கோடி ரூபாய் வசூல் செய்தது.

மேலும் படிக்க | அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டிக்கு ஷண்முகம் வைத்த ஆப்பு.. முத்துப்பாண்டி செய்யும் சதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News