தளபதி விஜய்க்காக முதல் ஆளாக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்!

விஜய்யின் தீவிர ரசிகையும், பிரபல நடிகையுமான கீர்த்தி சுரேஷ் தான் விஜய் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய சில நொடிகளிலேயே பின்தொடர்ந்து மேலும் தான் விஜய்யின் தீவிரமான ரசிகை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 5, 2023, 10:16 AM IST
  • ஏப்ரல் 2-ம் தேதியன்று இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரபூர்வ கணக்கை தொடங்கினார்.
  • கணக்கு தொடங்கிய இரண்டே நாளில் 5.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.
  • விஜய்யின் இன்ஸ்டா கணக்கை முதலில் ஃபாலோ செய்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தளபதி விஜய்க்காக முதல் ஆளாக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்! title=

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இவர் ஒரு தீவிரமான விஜய் ரசிகை, இதனை பலமுறை அவர் பேட்டிகளிலும் கூறியிருக்கிறார்.  விஜய்யின் தீவிரமான ரசிகையான இவர் அவருக்கு ஜோடியாகவே பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார்.  விஜய்யின் பிறந்தநாளுக்கு இவர் தனித்துவமாக ஓவியங்கள் மற்றும் இசை வடிவில் அவருக்கு பிறந்தநாள் பரிசுகளையும் கொடுத்துள்ளார்.  மேலும் தனது செயலின் மூலம் தான் எந்தளவுக்கு விஜய்யின் தீவிரமான ரசிகை என்பதை நிரூபித்து இருக்கிறார்.  இதுவரை இன்ஸ்டாகிராம் பக்கம் வராத நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் 2-ம் தேதியன்று இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரபூர்வ கணக்கை தொடங்கி இன்ஸ்டா உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

மேலும் படிக்க | ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு இவ்வளவு படங்கள் ரிலீசா?

 

இன்ஸ்டாகிராமில் விஜய் கணக்கை தொடங்கிய வெறும் இரண்டே நாளில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனாக அதிகரித்தது.  43 நிமிடங்களில் 1 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்ற உலகப் புகழ்பெற்ற பிடிஎஸ் இசைக்குழுவின் கொரிய பாப் கலைஞர் கிம் டேஹ்யுங் மற்றும் ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி ஆகியோருக்குப் பிறகு 1 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்ற இந்தியர் என்கிற சாதனையை நடிகர் விஜய் முறியடித்து, 59 நிமிடங்களில் 1 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்றிருக்கிறார்.  இந்நிலையில் தளபதி விஜய்யை இன்ஸ்டாகிராமில் முதலில் பின்தொடர்ந்தவர் யார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.  விஜய்யின் தீவிர ரசிகையும், பிரபல நடிகையுமான கீர்த்தி சுரேஷ் தான் விஜய் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய சில நொடிகளிலேயே பின்தொடர்ந்து மேலும் தான் விஜய்யின் தீவிரமான ரசிகை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.

சமீபத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த 'தசரா' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது, இப்படத்தில் இடம்பெற்ற 'மைனர் வேட்டி கட்டி' பாடல் ட்ரெண்டாகியுள்ளது.  இதனை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் 'சைரன்', மாரி செல்வராஜின் 'மாமன்னன்', 'ரகு தாத்தா' மற்றும் 'ரிவால்வர் ரீட்டா' போன்ற படங்கள் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க | விடுதலை படத்தில் நடித்த சூரிக்கு இவ்வளவு தான் சம்பளமா?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News