கார்த்திகை தீபம் அப்டேட்: தீபாவையும், அபிராமியும் கடத்தியது இவரா? கார்த்திக் கையில் ஆதாரம்

கார்த்திகை தீபம் சீரியலில் தீபாவையும், அபிராமியையும் கடத்தியது யார்? என்ற பரபரப்பு கிளம்பியிருக்கும் நிலையில் கார்த்தி கையில் சிக்கியிருக்கும் ஆதாரம் மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 29, 2023, 11:57 AM IST
  • அபிராமியை கடத்தி செல்லும் கும்பல்
  • திடீரென காணாமல் போகும் தீபா
  • கார்த்தி கையில் கிடைக்கும் ஆதாரம்
கார்த்திகை தீபம் அப்டேட்: தீபாவையும், அபிராமியும் கடத்தியது இவரா? கார்த்திக் கையில் ஆதாரம் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டாப் ரேட்டிங்கில் இருக்கும் கார்த்திகை தீபம், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும். திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் இன்றைய அப்டேட் வெளியாகியுள்ளது. வார இறுதி நாள் என்பதால் ரசிகர்களை உட்சக்கட்ட பரபரப்பில் வைத்திருக்கும் அளவுக்கான சூடான அப்டேட் தான் இப்போது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா கடத்தப்பட்டதாக வீட்டுக்கு வந்து மீனாட்சி சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

கொஞ்ச நேரத்தில் அருணும் வீட்டுக்கு வந்து அபிராமியும் கடத்தப்பட்டதாக அம்மாவிடம் சொல்ல எல்லோரும் இரட்டிப்பு பேரதிர்ச்சி. இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் கோவிலுக்கு வந்த அபிராமி, சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு குடும்பத்தினர் வந்து சாமியை வேண்டிக்கிட்டு நல்ல விஷயத்துக்காக பொங்கல் வைக்கிறோம்.  உங்கள மாதிரி பெரியவங்க கையால் அரிசி எடுத்துக் கொடுத்தால் அது நல்லபடியா நடக்கும் என்று சொல்லி அபிராமியை அழைக்கின்றனர். முதலில் மறுக்கும் அபிராமி பிறகு அரிசி எடுத்துக் கொடுக்கச் செல்கிறார். 

மேலும் படிக்க | Jailer Audio Launch: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..!

அப்போது, ஒரு மரத்திற்கு பின்னால் அழைத்துச் செல்லப்படும் அபிராமி, அங்கிருந்து கடத்தப்படுகிறார். இந்த விஷயம் அறிந்த கார்த்தி உடனடியாக போலீசுக்கு ஒரு போன் போட்டு அம்மாவும், தீபாவும் கடத்தப்பட்ட விஷயத்தை சொல்லி உதவிக்கு கூப்பிடுகிறான். மஃப்டியில் வரும் போலீஸ் கோவிலுக்கு வந்து அபிராமி கடத்தப்பட்ட இடத்தில் சோதனை செய்யும் போது ஒரு சிம் கார்டு கிடைக்கிறது.  அடுத்ததாக மீனாட்சியை அழைத்து சென்று தீபா காணாமல் போன இடத்தில் தேடுகின்றனர். அடுத்ததாக ஒரு குடோனில் தீபா இரும்புச் சேரில் கட்டி வைக்கப்பட்டிருப்பது காட்டப்படுகிறது. முதலில் மயக்கத்தில் இருக்கும் தீபா, பிறகு கண் திறந்து பார்க்க எதிரில் துரை நிற்கிறான். 

நீ என்னை கடத்தினது மட்டும் கார்த்திக் சாருக்கு தெரிந்தால் அவர் உடனே கிளம்பி வந்துடுவாரு, உன்னை சும்மா விட மாட்டாரு என தீபா வீர வசனம் பேசுகிறாள். அதற்கு பதில் கொடுக்கும் துரை, கார்த்தி வரமாட்டான் என பதிலடி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க |  Jailer Audio Launch: ஜெயிலர் படத்தின் அனைத்து பாடல்களும் ரிலீஸ்..! மொத்தம் இத்தனை பாடல்களா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

 

Trending News