விரைவில் அப்பா - மகன் திரையில் ஒன்றாக?

Last Updated : Oct 1, 2017, 02:57 PM IST
விரைவில் அப்பா - மகன் திரையில் ஒன்றாக? title=

கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மஹாதேவகி’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கவுதம் கார்த்திக்கின் அடுத்த படத்தில் அவரது தந்தை மற்றும் நடிகருமான கார்த்திக் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.

இயக்குனர் திரு இயக்கத்தில் ‘நவரச நாயகன்’ கார்த்திக், கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

அனேகன் படத்தின் மூலம் மீண்டும் வரவேற்பை பெற்ற கார்த்திக் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து தாகா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்திக் – கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கவிருக்கும் இப்படத்தில் அவர்களுடன் இரண்டு பிரபல கதாநாயகிகளும் மற்றும் பல பிரபல நடிகர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Trending News