Kanguva Movie Review By Siva And KE Gnanavel Raja : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.
கங்குவா:
கடைசியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்த இவர் அதன் பிறகு எந்த திரைப்படத்திலும் ஹீரோவாக நடிக்கவே இல்லை. விக்ரம், சர்ஃபிரா, ராக்கெட்டரி உள்ளிட்ட படங்களில் காமியோ கதாப்பாத்திரத்திலேயே வந்தார். இந்த படங்கள் ஹிட் ஆனதோடு, அவரது கேரக்டர்களும் பெரிதாக பேசப்பட்டது.
கங்குவா படத்தின் படப்பிடிப்பு, கடந்த 3 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது. வெளிநாடுகளிலும், காட்டுப்பகுதிகளிலும் நடந்த ஷூட்டிங், ஒரு வழியாக இந்த ஆண்டு முடிவடைந்தது. இதையடுத்து, இதன் டீசரும் வெளியானது. இதில் இடம் பெற்றிருந்த காட்சிகளும், நடிகர்களின் அந்த கால ஆடை வடிவமைப்புகளும் ரசிகர்களை கவர்ந்தது.
விமர்சனம்..
கங்குவா திரைப்படம், வரும் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதையடுத்து, இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் இப்போதே படக்குழுவினர் இறங்க ஆரம்பித்து விட்டனர். நேற்று, டெல்லியில் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், நடிகர் சூர்யா, ஞானவேல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கங்குவா படத்தின் இயக்குநர் சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனித்தனியாக சில தமிழ் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்தனர். அப்போது, படத்தை பார்த்து குறித்தும், படம் எப்படி வந்துள்ளது என்பது குறித்தும் விமர்சனங்களை தெரிவித்தனர்.
சிவா சொன்ன விமர்சனம்,,!
இயக்குநர் சிவா, கங்குவா படத்தின் ஒரு காட்சியை பற்றி பேசியிருக்கிறார். அந்த காட்சி மொத்தம் 7 நிமிடமாம். அந்த காட்சி மிகவும் உணர்ச்சி பூர்வமானதாக இருக்கும் என்றும், அது தன்னையே பாதித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதோடு சேர்த்து, இந்த படம், கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | கங்குவா ரிலீஸ் தேதி அறிவிப்பு... சூர்யா ரசிகர்கள் உற்சாகம்
ஞானவேல் ராஜா:
கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் அப்படத்தை பார்த்த அனுபவம் குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அதில், கங்குவா திரைப்படத்தின் முதல் பாதியை பார்த்த பிறகு தான் சூர்யாவிடம் பேசியதாக கூறினார்.
எந்த படத்தை பார்த்தாலும் அதில் இருக்கும் குறைகள் தனக்கு தெரியும் என்றும், அதன் பிறகுதான் குறைகள் தெரியும் என்றும் அவர் கூறினார். ஆனால் கங்குவா திரைப்படத்தில் அப்படி எந்த குறையுமே தனக்கு தெரியவில்லை என்று கூறிய அவர், படத்தில் எல்லாமே பாசிடிவாக இருப்பதாக கூறினார்.
படம் வெற்றி பெறுமா?
நடிகர் சூர்யா நடித்ததில் கடந்த 10 ஆண்டுகளில் வெளியான சூர்யாவின் படங்கள், எதிர்பார்த்தது போல விமர்சனத்தையோ வெற்றியையோ பெறவில்லை. சூரரைப்போற்று படமும், ஜெய் பீம் படமும் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் இவை திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனால், தற்போது பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கங்குவா படம் என்ன ஆகுமோ என்று ரசிகர்கள் பீதியில் உள்ளனர்.
மேலும் படிக்க | ‘கங்குவா’ படத்தில் சூர்யாவின் சொந்த தம்பி! என்ன கதாப்பாத்திரம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ