‘விஸ்வரூபம் 2’ இந்த ஆண்டு ரிலீஸ்!!

Last Updated : Apr 20, 2017, 01:15 PM IST
‘விஸ்வரூபம் 2’ இந்த ஆண்டு ரிலீஸ்!! title=

நேற்று முதல் பட வேலைகள், டப்பிங் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படம் 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாஸன், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த ‘விஸ்வரூபம்’ படம் பல சிக்கலுக்கு இடையில் ரிலீஸானது. ‘விஸ்வரூபம்’ ரிலீஸ் பிரச்சனையின் போது நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று  கமல் தெரிவித்தார். அந்த அளவுக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் அப்போதைய அரசு முட்டுக்கட்டை போட்டது.  

இதையடுத்து ‘விஸ்வரூபம் 2’ படம் எப்பொழுது தான் வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்டபடி இருந்தனர். தற்போது சமுக வலைத்தளத்தில் ‘விஸ்வரூபம் 2’ பட வேலைகள் மற்றும் டப்பிங் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விஸ்வரூபம் 2’ படத்தை எதிர்பார்க்கும் அனைவருக்கும். பிரச்சனையை சரி செய்ய நானே களமிறங்கி உள்ளேன் என கமல்ஹாஸன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News